நாம் வெளியூர் செல்லும் போது குறிப்பாக, பைபாஸ்ல போகும் போது, எங்கு பார்த்தாலும் நம் கண் முன்னே தெரிவது கும்பகோணம் டிகிரி காபி மட்டுமே .....!!

அது என்ன கும்பகோணம் டிகிரி காபி ...........!!!

அதில் மட்டும் அப்படி என்ன தனிச்சுவை? என்று நினைக்க வேண்டாம்.......

நிறமும் , தரமும் மாறாமல் கும்பகோணம் டிகிரி காபியை வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருட்கள்:


காபி கொட்டை - தேவையான அளவு

பால் - 1.5 கப் 

சர்க்கரை - தேவையான அளவு 

தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

காபி கொட்டையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து ஃபில்டரில் போடவும். அதன் மேல் ஒரு சிட்டிகை சர்க்கரையை தூவி பில்டரில் கொதிக்கும் தண்ணீரை விடவும்.

ஒரு முறை டிகாஷன் இறங்கியதும் அதை மட்டும் எடுக்கவும். தண்ணீர் சேர்க்காமல் பால் அரை லிட்டர் எடுத்து காய்ச்ச வேண்டும். பின்னர் கொதி நிலை சற்று குறைந்த பிறகு பாலுடன் டிகாஷனை கலக்கவும். (பால் இருக்கும் பாத்திரத்தில் டிகாஷனை ஊற்ற வேண்டும்).

கருமை நிறம் சற்று வந்ததும், சர்க்கரை வழக்கமாக போட்டுக் கொள்ளும் அளவில் பாதி சேர்க்கவும். பின்னர் நுரை வரும் பதத்தில் ஆற்றி டம்ளரில் ஊற்றினால் கும்பகோணம் டிகிரி காபி ரெடி..!

இத போய் பெரிசா நினைச்சிகிட்டு..........இவ்ளோதான் ..சோ சிம்பிள்.....!!!