சூனியக்காரி என அழைத்ததால் மன வேதனை பட்டவர் இன்று கின்னஸ் சாதனை...! 

ஒரிசா மாநிலத்தை சேர்ந்த கஞ்சம் என்ற மாவட்டத்தில் வசித்து வருபவர் 63 வயதாகும் குமாரி நாயக்.இவர் polydactylism என்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால் கை மற்றும் கால் விரல்களின்  எண்ணிக்கை நார்மலாக இருக்கும் மனிதர்களை போன்று இல்லாமல் சற்று அதிகமாக இருக்கிறது.

இதன் காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள பொது மக்களால் சூனியக்காரி என அழைக்கப்பட்டவர். இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இருந்தாலும் கூட வித்தியாசமாக இருப்பதால் இவருடைய புகழ் உலகம் முழுவதும் தெரியவந்தது. இதற்கு முன்னதாக 14 கால்விரல்கள் மற்றும் 14 கைவிரல்கள் கொண்ட தேவேந்திரர் சுதர் என்பவர் கின்னஸ் சாதனையை படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்.

இந்த நிலையில் இவரது சாதனையை முறியடிக்கும் விதமாக குமாரி நாயர் தன் காலில் 19 கால் விரல்களும் 12 கை வில்களையும் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.