உலகின் எந்த மூலையில் இருந்தாலும் போன் மூலம் “இச் இச்..ம்ம் முத்தம் கொடுக்க “கிஸ் மேசன்ஜர்” ....!!!

உறவுகளை விட்டு பிரிந்து வாழும் நமக்கு, அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கண்டிப்பாக தோன்றும். 

தொலைவில் உள்ள நம் அன்பர்கள் யாராக இருந்தாலும், ஒரு நாள் பேசவில்லை என்றால் கூட வருத்தமாக இருக்கும். இதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க , மொபைல் போன் வந்தாச்சி. அடுத்தக்கட்டமா, வீடியோ காலிங்கில் பேச , வாட்ஸ் ஆப், ஸ்கைப் போன்ற ஆப்ஸ் உபயோகத்தில் உள்ளது.

அனால், தற்போது, உணர்வுகளை பரிமாறிக்கொள்ள , தங்களின் அன்பை வெளிபடுத்த பல முறைகள் இருந்தாலும் முத்தம் கொடுத்து அன்பை வெளிபடுத்துவதும் சிறந்த ஒன்று.

குறிப்பாக, அயல் நாடுகளில் வாழும் கணவன்மார்கள் கூட, தன் அன்பு மனைவிக்கு , அங்கிருந்தே முத்தம் கொடுக்கலாம்.

அதாவது , உலகில் எந்த மூலையில் இருந்தாலும், நாம் போன் மூலமே முத்தம் கொடுக்க முடியும். அதற்காக புதியதாக “கிஸ் மேசன்ஜர்” ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது கிஸ் மெசன்ஜர் கேட்ஜெட்டில் உதடுகளை கொண்டு அழுத்தம் கொடுத்து முத்தம் கொடுக்கும் போது, அதன் அழுத்தம் எதிர்முனையில் இருப்பவர்களால் உணரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிஸ் மெசன்ஜர் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும், இந்த ஆப்ஸ் மூலமாக முத்தம் கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.