மரத்தை சுற்றி கிரண்பேடி செய்த ஆச்சர்ய விஷயம்..! வாய் பிளந்து போன ஊழியர்கள்..! 

புதுவை  கிரண்பேடி எதை செய்தாலும் அதில் ஓர் வித்தியாசத்தை விட்டு செல்வார் அந்த வகையில் அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது ராக்கி கட்டும் விசேஷம் நேற்று புதுவை தாவரவியல் பூங்காவிற்கு திடீரென ஆய்வு மேற்கொள்ள சென்ற கிரண்பேடி ரக்ஷா பந்தனை நினைவு கூர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த ஒரு பழமையான மரத்திற்கு ராக்கி கயிறு கட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

காரணம்... மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அங்கு இருக்கக்கூடிய ஊழியர்கள் மட்டுமின்றி பொது மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு கிரண்பேடி செய்துள்ளதாக பேசப்படுகிறது. கிரண்பேடி ராக்கி கட்டிய அந்த பழமையான மரத்திற்கு வயது 192 என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது தவிர்த்து அந்த மரத்திற்கு வேளாண்துறை இயக்குனரான பாலகாந்தியின் பெயரையும் சூட்டியுள்ளார். இதேபோன்று மற்ற மரங்களுக்கு அந்தப் பூங்காவில் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் பெயர்களை சூட்டுமாறும் அறிவுறுத்தி அனைவரையும் சந்தோஷப்படுத்தி உள்ளார். அங்கிருந்து நேராக புதுவை கடற்கரைக்கு சென்ற கிரண்பேடி மழையிலும் ஓய்வில்லாமல் தங்களது கடமையை ஆற்றிய ஊழியர்களை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் மழை என்றும் பாராமல் கிரண்பேடியின் பணியை துரிதமாக செய்து வருவதால் பொதுமக்கள் கிரண் பேடிக்கும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.