kids suffers by diabetic due to seeing tv long time
பெற்றோர்கள் கவனத்திற்கு...! 3 மணி நேரம் டிவி பார்க்கும் குழந்தைக்கு வருகிறது சர்க்கரை நோய்...
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நம் மூளைக்கு மட்டுமே வேலை கொடுக்கிறது. உடல் உழைப்பு என்பது வெகுவாக குறைந்து விட்டது என்றே கூறலாம் .ஒவ்வொரு நாளும் விஞ்ஞான உலக படைப்புகளான வீடியோ கேம்ஸ் முதற்கொண்டு டிவி என ஆரம்பித்து நம்முடைய பொழுதுபோக்கு என்றாலே அது டிவி,கேம்ஸ் என ஆகிவிட்டது .
அதிலும் குறிப்பாக ஓடி ஆடி விளையாட வேண்டிய வயசுல ,ஓரிடத்திலேயே அமர்ந்து நீண்டநேரம் டிவி பார்த்துக்கொண்டும், கேம்ஸ் விளையாடிக்கொண்டும் இருக்கிறார்கள் நம்முடைய குழந்தைகள் .
இது போன்ற பழக்கவழக்கத்தால் குழந்தைகளின் உடலில், சுரப்பிகள் சரிவர செயல்படாமல், ஹார்மோன் குறைப்பாடு ஏற்படுகிறது .இதன் விளைவாக உடற்பருமன் ஏற்படுகிறது .இன்சுலின் சுரப்பி போதுமான அளவிற்கு சுரக்காமல் போவதால், எளிதில் சர்க்கரை நோய் வருகிறது .
முன்பெல்லாம் 5௦ வயதை கடந்தவர்களுக்கே சர்க்கரை போன்ற நோய்கள் வருவது வழக்கம். ஆனால் இப்பொழுதோ , சிறு குழந்தைகளுக்கே சர்க்கரை நோய் வருகிறது.
இதிலிருந்து நம் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள, நம்முடைய வாழ்க்கை முறையை கட்டாயாம் மாற்றியாக வேண்டும். இல்லையென்றால் இது போன்ற பல பிரச்சனைகளை நம் குழந்தைகள் சிறு வயதிலே எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த தகவலை லண்டனை சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுன்ளனர் .
