பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர், மக்கள் படும் அவதி சொல்லி மாளாது.

 ஒரு சில ஏடிஎம் மையத்தில் மட்டும் பணம் கிடைக்கப்பெற்றதால், நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து பணம் எடுத்தனர். பல மணி நேரம் காத்திருப்பின் போது, பலருக்கு மயக்கம், கை கால் வலி, இவ்வளவு ஏன் வயதான ஒரு சிலர் மரணம் கூட அடைந்தனர்.

இந்நிலையில், வெட்ட வெளிச்சத்தில், உச்சி வெயில் கூட பார்க்காமல், நீண்ட வரிசையில் காத்திருந்து, ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுப்பதை பார்த்து இருப்போம்.

ஆனால் , ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், அங்குள்ள ஆந்திர வங்கியில் பணம் எடுப்பதற்கு, தங்கள் செருப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, நீண்ட வரிசையை ஏற்படுத்தினர்.

வங்கி திறந்தவுடன் , முற்றி மோதி உள்ளே செல்வதற்கு பதிலாக , இவ்வாறு முன்கூட்டியே செருப்புகளை வைத்து இடத்தை பிடித்து, வங்கி ஓரத்தில் உள்ள நிழலில் அமர்ந்து கொண்டு , எப்பொழுது வங்கி திறக்கப்படுமோ என ஆவலுடன் காத்து கிடக்கின்றனர் மக்கள். இந்த காட்சி , மற்ற மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயத்தில் , இந்த சம்பவம் அனைவரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூகவளைதலத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.