Keerthy suresh dance: காந்தாரி காந்தாரி...பாடலுக்கு வீதியில் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்...! வைரல் வீடியோ..!
Keerthy suresh dance: கீர்த்தி சுரேஷ் தன்னுடைய முதல் ஆல்பம் வீடியோவான, காந்தாரி காந்தாரி பாடலுக்கு ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் தன்னுடைய முதல் ஆல்பம் வீடியோவான, காந்தாரி காந்தாரி பாடலுக்கு ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய உலகில் பலரும், இணையத்தில் ஆல்பம் பாடல் ரீலிஸ் செய்து ஹிட் அடித்து வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது கீர்த்தி சுரேஸும் இணைத்துள்ளார். இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், நடனம் காந்தாரி பாடலில் கவனம் பெற்றுள்ளது.
முழுக்க முழுக்க தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இந்த பாடலுக்கு, பவன் சிஹெச் இசையமைத்திருக்கிறார். சுடாலா அசோக் தேஜா எழுதியிருக்கிறார். பிரபல நடன இயக்குநர் பிருந்தா நடன இயக்கம் செய்திருக்கிறார். இந்தப் பாடலை கடந்த பிப்ரவரி 21 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ், “ உங்களுக்கு பாடல் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இந்தப்பாடலை தற்போது வரை 38 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இது மட்டுமல்லாமல், இந்தப்பாடல் தற்போது யூடியூப் ட்ரெண்டில் இருக்கிறது.
நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.
தமிழில்ஏ.எல்.விஜய் இயக்கிய, நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானார். இந்த படம் தோல்வியை சந்தித்தாலும், தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
விஜய்யுடன் ‘ பைரவா’ சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்’, சமீபத்தில் ரஜினியின் ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் மகாநடி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அறிமுகமாகும் போது, கொழுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். தற்போது, இவரின் செல்வராகவன் நடித்துள்ள ‘சாணி காயிதம்’, தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த ‘சர்க்காரு வாரிப் பட்டா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
மேலும், அண்மையில் இவர் நடிப்பில் வந்த ‘குட் லக் சகி படம்’ கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சீரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ‘போலே சங்கர், மலையாளத்தில் டொவினோ தாமஸின் ‘வாஷி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தன்னுடைய முதல் ஆல்பம் வீடியோவான, காந்தாரி காந்தாரி பாடலுக்கு ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், படிக்க பச்சை நிற உடையில் கையை தூக்கி...பால் வண்ண பதுமை போல் இருக்கும் ரகுல் பிரீத் சிங்...