அழகர் மலையில் உள்ளது ஸ்ரீ கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில். இந்த  கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் உள்ள 18 படிகளின் காவலனாய், சத்திய தெய்வமாய் அழைத்த குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் மக்களின் மனதில் குடிகொண்ட அழகரின் தளபதியான "பதினெட்டாம்படி கருப்பணசாமியின்" சன்னதி உள்ளது.

இந்த சன்னதியின் கதவு  ஆண்டு தோறும் பூட்டியபடியே இருக்கும். ஆனால் வருடத்திற்கு  ஒருமுறை  ஆடிப்பெருக்கு  அன்று, அதாவது  இன்றைய தினத்தில், சன்னதி  கதவுக்கு சந்தனம் சாத்தி நேர்த்தி கடன் செலுத்துவர்.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அதாவது ஆடி மாதம் பெளர்ணமி அன்று மட்டும் (இன்று) பதினெட்டாம் படியின் கதவுகள் ஒரிரு நிமிடங்கள் மட்டும் திறந்து  வைக்கப்படும். 

பதினெட்டாம் படியின் தரிசனமும், அக்னி ஜூவாலையாக கருப்பனையும் தரிசிக்க முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த அற்புத காட்சியை இங்கே இன்று பார்க்கலாம்.