கர்நாடகாவில் பள்ளி திறக்கப்பட்ட 3 நாட்களில்  51 ஆசிரியர்கள் மற்றும் 5 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, 8 மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

இந்நிலையில் பள்ளிகள் திறந்த 5 நாளில் பல்வேறு மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் 22 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரியர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கொரோனா பாதித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.