மதுரை மீனாட்சி மீது கலைஞருக்கு அதீத பக்தி உண்டு..! வெளிவராத ரகசியத்தை போட்டு உடைத்த மூத்த எம்.பி..!

இதுவரை யாருக்கும் தெரியாத கருணாநிதி பற்றிய ரகசியம் ஒன்றை பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தற்போது தெரிவித்துள்ளார்.

இல கணேசன் பாஜக வை சேர்ந்தவர் என்றாலும் கூட திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது குடும்பத்திற்கும் மிக நெருக்கமானவர். திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தின் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்டாயம் கலந்து கொள்வார் இல. கணேசன். கட்சி ரீதியாக  வேறு வேறு என்றாலும்,இல கணேசனை திமுக காரர் என்று கூட அவ்வப்போது விமர்சனம் செய்வதும் உண்டு. 

அந்த அளவுக்கு இவர்களின் நட்பு பல ஆண்டு காலமாக நீடித்து நிலைத்து இருந்தது. தற்போதும் நிலைத்து வருகிறது. இந்த ஒரு நிலையில் கருணாநிதி பற்றி இல கணேசன் தெரிவிக்கும் போது, "தனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும்... அப்போது நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். அதன்பிறகு போனதாக எனக்கு தெரியவில்லை.. இப்படி ஒரு நிலையில் ஒரு முறை கலைஞர் கருணாநிதி அவர்கள் எனக்கு ஒரு ஆசை உள்ளது என தெரிவித்தார். நான் என்ன என்று கேட்டேன். அப்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என குறிப்பிட்டார்.

ஏற்கனவே நான் பழனிவேல்ராஜனிடம் சொல்லிருக்கேன் எனவும் தெரிவித்து தெரிவித்து இருந்தார். அப்போது மீனாட்சி அம்மனுக்கு ஆடி15 சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது. அந்த சமயத்தில் கற்பூரம் ஏற்றுவதற்கு சற்றுமுன் நான் உள்ளே வந்து சிறிது நேரம் இருந்து விட்டு வருகிறேன் என தெரிவித்து இருந்தார் கலைஞர். அதற்கேற்றவாறு கற்பூரம் ஏற்றுவதற்கு முன் கலைஞர் மீனாட்சி அம்மனை பார்ப்பதற்காக வந்தார். கற்பூரம் ஏற்றுவதற்கு முன்பாக தேவாரம் பாடினார்கள். 

தேவாரம் பாடும், போதுசிறிது நேரத்தில் கண்ணீர் வந்தது, அடுத்த சில வரிகள் பாடியபோது மெய்சிலிர்த்துப் போய் நின்றார். உடனே பழனிவேல் ராஜனை அழைத்து என்னை உடனே வெளியில் அழைத்துச் செல் எனக்கு ஒரு மாதிரி உள்ளது என தெரிவித்திருந்தார் கலைஞர். இதனை என்னிடம் கலைஞர் குறிப்பிட்டு இருந்தார் என தெரிவித்து உள்ளார் இல.கணேசன்

கலைஞரைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டு இருந்தாலும் மூடநம்பிக்கை பற்றி பெரிதாக பேசினாலும் அவருக்கு இருந்த ஓர் ஆசையில் மீனாட்சி அம்மனை பார்க்க வேண்டும் என்பதும் தற்போது இல கணேசன் மூலம் தெரியவந்துள்ளது