திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட சிறு வயது போட்டோ ஒன்று சமுக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

கலைஞர் மற்றும் முரசொலி மாறன் குடும்பத்தினர் இன்று அரசியலிலும் சரி, வியாபாரத்திலும் சரி..பெரும் ஜாம்பவான்களாக உள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக இந்த புகைப்படத்தில் இடம் பெற்று இருக்கும் அனைவரையும் பார்க்கும் போது திமுக தொண்டர்கள்.. இதில் தளபதி யார்..? அழகிரி யார்..? மு.க முத்து யார்..? தமிழரசு யார்..? என உற்று பார்க்கின்றனர்.

அதிலும், மு.க ஸ்டாலினின் சிறுவயது போட்டோவை பார்ப்பவர்கள், அட ..நம் தளபதியா இது..? என ஆச்சர்யமாக பார்கின்றனர். வாங்க நாமும் பார்க்கலாம். அப்படி யாரெல்லாம் இந்த போட்டோவில் இடம் பெற்று உள்ளனர் என...

நடுவில் இருப்பது கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள், அவருடைய மடியில் அமர்ந்து இருப்பது மு.க.தமிழரசு. அதாவது நடிகர் அருள்நிதியின் தந்தை. அஞ்சுகம் அம்மாள் அவர்களுக்கு இடது புறமாக நின்று கொண்டிருக்கும் சிறுவன் தான் மு.க ஸ்டாலின், அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர் மு.க.அழகிரி. அதே போன்று அஞ்சுகம் அம்மாளுக்கு வலப்புறமாக அமர்ந்து கொண்டிருப்பவர் செல்வி, அவருக்கு அடுத்து நின்று கொண்டிருப்பவர் கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்து, அதற்கு அடுத்தபடியாக முரசொலிமாறன்,செல்வியின் கணவர் செல்வம், கலைஞரின் அக்கா மகன் அமிர்தம் என இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நின்று எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

முரசொலி மாறன், கலைஞர், ஸ்டாலின், அழகிரி, செல்வி,செல்வம் என இவர்களின் தற்போதைய தோற்றம் நம் மனதில் பதிந்து இருந்தாலும், இவர்கள் சிறுவயதாக இருக்கும் போது எப்படி இருந்துள்ளனர் என எதிர்ப்பார்ப்போடு பார்க்கின்றனர் தொண்டர்கள் பொதுமக்களும்..! 
 
இந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.