சர்க்கரை நோய்க்கு மிகவும் பெயர் பெற்ற நாடாக மாறி உள்ளது இந்தியா. சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் மாத்திரை மருந்துகளை எடுத்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க இயற்கையாக கிடைக்கக்கூடிய சாறு வகைகளை தினமும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை கட்டுக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.  

1. எலுமிச்சைச் சாறு – 200 மில்லி

2. இளநீர் – 200 மில்லி

3. வாழைத்தண்டுச்சாறு – 200 மில்லி

4. அருகம்புல் சாறு – 100 மில்லி

5. நெல்லிக்காய் சாறு – 200 மில்லி

6. கொத்துமல்லிச் சாறு – 100 மில்லி

7. கருவேப்பிலைச்சாறு – 100 மில்லி

கொடுக்கப்பட்டுள்ள சாறுகளில் ஏதேனும் ஒன்று மட்டும் எடையளவு மீறாமல் தினசரி சேர்த்துக்கொள்ளவும். சர்க்கரை நோயாளிகள் இளநீர் சாப்பிடக்கூடாது என்ற தவறான அபிப்பிராயம் பரவலாகக் காணப்படுகிறது. இளநீரில் இளமைத் தன்மையுள்ள கால்சியம் காணப்படுகிறது. அதாவது மருந்துவ குணம் கொண்ட கால்சியம். இதனால் இளநீர், உள் ரணம் ஆற்றுவதிலும், எலும்புகளைப் பலப்படுத்துவதிலும், சிறுநீரகங்களை நன்கு இயங்கச் செய்வதிலும் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒன்று அல்லது இரண்டு இளநீர் சாப்பிடலாம் தவறில்லை என கூறுகின்றனர்.