செப்டம்பர் முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரிலையன்ஸ் ஜியோ ப்ரீ டேட்டா, ப்ரீ வாய்ஸ் கால்ஸ் என அனைத்தும் இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த இலவச சேவை டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்ததாக என்ன கட்டணம் நிர்ணயிக்கப்படுமோ என ஜியோ வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ளனர்.
இந்தநிலையில், ரிலையன்ஸ் ஜியோ பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
அதாவது,வெறும் 500 ரூபாய்க்கு 15 mpbs வேகத்தில் 600 GB4G டேட்டா வசதியை ஜியோ நிறுவனம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறாமல் இருக்க இது வழி செய்யும் என்றும் கூறப்படுகிறது.
