ஜியோ சலுகைகள் அறிவித்த நாட்கள் முதலே , மற்ற நிறுவனங்கள் கூட போராட்டத்தில் தான் உள்ளது. இதனை தொடர்ந்து, சலுகைகளை வாரி வாரி வழங்கியது, ஜியோவிற்கு எதிராக மற்ற நிறுவனங்கள் ......!

கடைசியில், சேவை பரிவர்த்தனையில் குத்துசண்டை மட்டும் தான் நடக்க வில்லை ஜயொவிற்கும் , ஏர்டெல்லிற்கும். அந்த அளவுக்கு மாறி மாறி குறை சொல்லிக்கொண்டே இருந்தது ஜியோவும் , ஏர்டெல்லும்.

சரி.....சலுகை வழங்கி தன் பக்கம் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள தற்போது மேலும் ஒரு புதிய சலுகையை அறிவிச்சு இருக்கு......ஜியோ மற்றும் ஏர்டெல்.......மீண்டுமா?

அதாவது, ஐ போன் 7 மற்றும் ஐ போன் 7 பிளஸ் மொபைல் மூலமா, தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஜியோ மற்றும் ஏர்டெல்.

ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டு நிறுவனங்களும் , ஐ போன் 7 மற்றும் ஐ போன் 7 பிளஸ் மொபைல் வாங்கும் தங்கள் வாடிகையாளர்களுக்கு, பல அதிரடி சலுகைகளை அறிவிச்சு இருக்கு.

அதே சமயத்தில், ஐ போன் 7 மற்றும் ஐ போன் 7 பிளஸ் மொபைல் , அதிக விலை என்பதால், மாத தவணை முறையில் வாங்கும் ஒரு சிறப்பான சலுகையை இரண்டு நிறுவனங்களும் அறிவிச்சு இருக்கு.

இந்த சலுகை தற்போது, நொய்டா மற்றும் கர்நாடகாவில் மட்டும் நடைமுறையில் உள்ளது. இதனை தொடர்ந்து,, இன்னும் சில மாதங்களில், நாட்டின் அனைத்து நகரங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.