இந்திய தொலைத்தொடர்பு துறையில் புயலை கிளப்பி விட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வாாி வழங்கியுள்ளது. அப்படியான ஜியோ சேவைகளில் ஒன்று தான் காலர் ட்யூன் அம்சம். ஜியோ வழங்கும் காலர் டியூனை ஒரு மாத காலம் இலவசமாக பெற முடியும் என்பது கூடுதல் தகவல். அதை எப்படி பெறுவது என்பதை பற்றிய தொகுப்பை இப்பாேது பாா்க்கலாம்...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் 30 நாட்கள் இலவச காலர் ட்யூனை பெறுவதற்கு கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்
1. இரட்டை சிம் ஸ்மார்ட்போன் பயனர் செயல்முறை தொடங்கும் முன்பு நீங்கள் ஜியோ நெட்வொர்க்கில் தான் உள்ளீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் குறிப்பாக ஒரு இரட்டை சிம் ஸ்மார்ட்போன் பயனர் என்றால் உங்கள் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
2. இப்போது உங்கள் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி எண்ணில் இருந்து 'JT' என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
3. நீங்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்பட பாடல் அல்லது ஆல்பம் தேடுகிறீர்கள் என்றால், பின்வரும் கமெண்ட்களின் அடிப்படையில் தேடுதலில் ஈடுபடலாம். கமெண்ட் திரைப்பட தேடலுக்கு 'Movie' என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு அனுப்பவும். பாடல்களுக்கு 'SINGER' என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஆல்பங்களுக்கு 'ALBUM' என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
4. இப்போது, ஜியோ சர்வர்களிடம் இருந்து ஒரு பதில் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். பொதுவாக 10-15 வினாடிகள் காத்திருக்க வேண்டும். பின்னர் ஸ்க்ரீனில் உங்களுக்கு தேவையான பாடல் தேர்வுதனை நிகழ்த்த வேண்டும்
5 .பிடித்த பாடல்களை தேர்வு செய்த பின்னர் இறுதி படியாக, நீங்கள் 'Y' என்று டைப் செய்து ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும். ஒரு நிமிடத்திற்குள் உங்கள் எண்ணில் காலர் ட்யூன் செயல்படுத்தப்படுகிறது என்ற ஒரு மெசேஜை பெறுவீர்கள்.
