“கட்டண ரசீது” சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த ஜியோ ........!!!
கடந்த இரண்டு தினங்களாக , ரிலையன்ஸ் ஜியோ பற்றி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்த , “ஜியோ பில் “ சர்ச்சைக்கு தற்போது முற்றுபுள்ளி வைத்துள்ளது ஜியோ....!
அதாவது , “ஜியோ வெல்கம் ஆபர்” மூலம், டிசம்பர் 31 ஆம் தேதி வரை , அன்லிமிடெட் கால்ஸ், 4ஜி டேட்டா சேவையை வழங்கியது ஜியோ....தற்போது இது நடைமுறையிலும் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில், மும்பையில் வசிக்கும் ஒருவருக்கு, ரூபாய் 27,718 கட்ட வேண்டும் என ஜியோவிலிருந்து, போஸ்ட் பேய்ட் பில் வந்ததாக கூறி, அந்த நகல் சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவி வந்தது......
இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக, அது போலியான பில் என்று கூறி ,ஜியோ மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, ஜியோ விற்கு எதிராக யாரோ இது போன்று செய்துள்ளதாக தெரிகிறது......
