இப்படி ஒரு சலுகையில் இறங்கிய ஜியோ..! ஜியோ ஃபை வெறும் ரூ.499 மட்டுமே... அதுமட்டுமா ..?

ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் சரிவை கண்டன.

ஜியோவை பொறுத்தவரையில் எந்த ஒரு அறிவிப்பு  வெளியானாலும் அது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் இன்ப அதிர்ச்சி செய்தியாக தான் இருக்கும்...

அந்த வகையில் தற்போது, ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ வைப்பை ரவுட்டர் வாங்குபவர்களுக்கு மிக சிறந்த சலுகையை அறிவித்து உள்ளது

அதன்படி,ரூ.500 கேஷ்பேக் வழங்கும் சலுகை அறிவித்து உள்ளது.

ஜியோ வைப்பை ரவுட்டர்

இந்த ரவுட்டரை ரூ.999 ரூபாய்க்கு விற்று வந்தது ஜியோ. இந்நிலையில் புதிய வாடிக்கையாளர்கள் இதனை வாங்கும் போது ரூ.199 க்கான போஸ்ட்பெய்ட் திட்டத்தை செலக்ட் செய்ய வேண்டும்.

இதில் இலவச எஸ்எம்எஸ், வெளிநாடுகளுக்கு வெறும் 50 பைசாவில் கால்ஸ் பேசலாம் (ஒரு நிமிடத்திற்கு வெறும் 50 பைசா என்றால் பாருங்களேன்)

25 GB டேட்டா ப்ரீ

இந்த திட்டத்தில் வாங்குபவர்கள் ஒரு வருடம் கழித்து, ரூ.500 கேஷ்பேக் பெற முடியும் என்பது குறிபிடத்தக்கது.

ஜியோ புதிய ரவுட்டர் வாங்குபவர்களுக்கு இது மிகவும் சூப்பர் திட்டம். காரணம் ரூ.500 கேஷ்பேக் சலுகை கிடைப்பதன் மூலம், ரவுட்டரின் விலை ரூ.499 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இது ஏற்கனவே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கிடையாது. புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.