விவாகரத்து சொன்ன மகள்... பட்டாசு வெடித்து கொண்டாடிய தந்தை.. எங்கு தெரியுமா?
தனது மகளின் விவாகரத்து முடிவை பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் கொண்டாடிய தந்தை. எங்கு தெரியுமா?
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வசிப்பவர் பிரேம் குப்தா. இவருக்கு சாக்சி என்ற மகள் உள்ளார். சாக்சிக்கு கடந்த ஏப்ரல் அன்று சச்சின் குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். தம்பதிகள் திருமணத்திற்கு பின் பஜ்ராவில் வசித்து வந்தனர். ஆரம்பத்தில் இருந்து தனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தாரின் நடவடிக்கைகளில் சாக்சிக்கு சந்தேகம் இருந்தது. மேலும் சாக்சி தனது மாமியாரால் துன்புறுத்தப்பட்டார். சில சமயங்களில் அவளது கணவர் அவளை வீட்டில் வைத்து பூட்டி விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், சாக்சி தனது கணவரின் லேப்டாப்பை பயன்படுத்தும் போது அதில் இரண்டு பெண்களுடன் அவர் தனித்தனியே திருமண கோலத்தில் இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் ஏற்கனவே இரண்டு முறை வேறு பெண்களை திருமணம் செய்து, தற்போது மூன்றாவதாக தன்னை திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது. பின் சாக்சி சச்சின் குமார் செய்த அட்டூழியங்கள் அனைத்தையும் தனது தந்தையிடம் கூறியதோடுமட்டுமல்லாமல், அவரை விவாகரத்து செய்ய விரும்புவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஏன் விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகிறது? காரணங்கள் என்ன தெரியுமா..?
இதனை அடுத்து மகளுக்கு நேர்ந்த இருந்த கொடுமையை அறிந்த சாக்சியின் தந்தை சச்சின் குமாரின் வீட்டிற்கு சென்று தனது மகளை பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்து மீண்டும் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தார். தனது மகளின் விவாகரத்து முடிவை அவர் இப்படி பெரும் விழாவாக கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதுகுறித்து சாக்சி கூறுகையில், "இவ்வளவு ஆதரவான பெற்றோர்கள் எனக்கு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி" என்று மகிழ்ச்சி அடைந்தார். அதே நேரத்தில் சமூக ஊடக பயனர்கள் அவரது தந்தையின் நடவடிக்கைகளைப் பாராட்டினர், அவரது முற்போக்கான மற்றும் அக்கறையுள்ள அணுகுமுறையைப் பாராட்டி வருகின்றன.