ஷூட்டிங் நடுவே டென்ஷனில் சிகரெட் பிடித்த ஜெயம் ரவி..! வைரலாக பரவும் புகைப்படம்...! 

சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் எது செய்தாலும் அவர்களுடைய ரசிகர்களுக்கு அது உற்சாகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மூன்று மணி நேரம் மட்டுமே உள்ள படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகள் ரசிகர்கள் மனதில் ஒரு விதமான உற்சாகத்தை ஏற்படுத்தும்.

அந்த குறிப்பிட்ட படத்தில் வரும் காட்சிகள் போலவே, அந்த காட்சியில் ஹீரோ எப்படி நடந்து கொள்கிறார் என்பது போலவே நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய ரசிகர்கள் கடைபிடிப்பார்கள். அப்படி நல்லனவற்றை கடைப்பிடித்தால் ஆதரவு தரலாம். ஆனால் ஒரு சில நேரங்களில் மாறாக தீயவற்றை கூட கடை பிடிக்க நேரிடும் அல்லவா? சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... தற்போது ஆனைமலை அருகே ஜெயம் ரவி ஷூட்டிங்கில் உள்ளார். இடைப்பட்ட நேரத்தில் டென்ஷனில் சிகரெட் அடித்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற ரசிகர்கள் யாரோ போட்டோ எடுத்து உள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவ தொடங்கியுள்ளது. அவர்களுடைய ரசிகர்கள் ஜெயம்ரவி ஏன் இவ்வளவு டென்ஷனா சிகரெட் அடிக்கிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எந்தப்படம்; எப்படிப்பட்ட காட்சி என்பது குறித்த முழு விவரம் தெரியவில்லை... ஆனால் ஜெயம் ரவி சிகரெட் பிடிக்கும் காட்சி படத்தில் இடம் பெறுமா அல்லது தனிப்பட்ட முறையில் சிகரெட்  பிடித்துள்ளாரா என சந்தேகத்தை கிளப்பி உள்ளது இந்த போட்டோ