ராமதாஸ் வீட்டில் திடீரென நுழைந்த ஜெயலலிதா...! அதிர்ந்து போன உறவினர்கள்...!  

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு இன்று திருமண நாள் என்பதால் கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

1968 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி புதுவையில் பிறந்த அன்புமணி பின்னர் அவருடைய பள்ளி வகுப்வை ஏற்காட்டில் தொடர்ந்தார். 1986 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பை முடித்தார். பின்னர் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தார். அதன்பின்னர் திண்டிவனம் அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

1989 ஆம் ஆண்டு இராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் தன்னுடைய பங்கை அளிக்க தொடங்கினார் அன்புமணி. 2004  ஆண்டு முதல் இளைஞரணி தலைவராக உள்ள அன்புமணி ராஜ்யசபா எம்பியாக இருந்தார்.

மன்மோகன் சிங் ஆட்சியின் போது 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி. தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும்  போட்டியிட்டு தோல்வியுற்றார். இருந்தாலும் தற்போது ராஜ்யசபா எம்பிபதவியில் உள்ளார் அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு இன்று திருமண நாள் என்பதால் தொண்டர்கள் அவர்களுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இவரின் திருமணத்தின் போது பல்வேறு முக்கிய புள்ளிகள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தொண்டர்கள் என கலந்துகொண்டனர்.

குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களும் அன்புமணியின் திருமணத்திற்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அன்புமணியின் திருமண நாளான இன்று பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.