கருத்தரிக்க நேரம் கணிப்பு : ‘ ஜனவரி 2, இரவு 10.36 மணி ” - தேசிய கருத்தரிப்பு நாள்”...!!!

குழந்தை பிறப்பு என்பது , மிகவும் அற்புதமான ஒன்று. அதிலும், ஒரு குறிப்பிட்ட நாட்களில் குழந்தை பிறந்தால் , நம் வாழ்வில் நல்ல முனேற்றம் இருக்கும் என நினைப்பவர்கள் அதிகம்.

அதிலும் கூட, தட்ப வெட்ப நிலை, காலத்தின் மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் , குறிப்பாக மக்கள் , செப்டம்பர் 26 ஆம் தேதியன்று குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என லண்டன் வாழ் மக்கள் கருதுகின்றனர்.

அதனால், முன்கூட்டியே அதற்காக திட்டமிடுகின்றனர். மேலும், புத்தாண்டு முடிந்த நிலையில், மகிழ்ச்சியாக வீட்டில் இருக்கும் போது, தாம்பத்யம் நடந்தால், ஒன்பதாம் மாதம் இறுதியல் குழந்தை பிறப்பு இருக்கும் என்பது குறிபிடத்தக்கது.

இது குறித்து நடைபெற்ற ஆய்வில், 71 சதவீத மக்கள் , ஜனவரி 2 ஆம் தேதிம், இரவு 10.36 மணியளவில் தாம்பத்யம் வைத்துக்கொள்ளவே விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் 23 சதவீத மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது குழந்தை பெற்று கொள்ள விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது குறிபிடத்தக்கது.