பட்டய கிளம்புது.....”ஜல்லிக்கட்டு வாட்ஸ் ஆப் குரூப் “.......ஒன்று கூடுகிறது ஜல்லிக்கட்டு பட்டாளம் ...!!!

தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக நடந்த அறப்போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. பல லட்ச கணக்கான இளைஞர்கள் ஒன்றாக திரண்டு ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள்.

தமிழக மக்களின் இந்த அறவழி போராட்டம் உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக , இளைஞர்களுக்கு நல்ல ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் இந்த ஆதரவு ஜல்லிகட்டுகாக மட்டும் இல்லாமல், தொடர்ந்து ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உறவுகளை பலப்படுத்தும் நோக்கிலும் தற்போது ஆங்காங்கு வாட்ஸ்ஆப் குரூப் ஜல்லிக்கட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை ஜல்லிக்கட்டு வாட்ஸ் ஆப், திருநெல்வேலி ஜல்லிக்கட்டு வாட்ஸ் ஆப், தூத்துக்குடி வாட்ஸ் ஆப் விருதுநகர் வாட்ஸ் ஆப், திருவள்ளூர், காஞ்சிபுரம் என பெரும்பாலான இடங்களின் பெயரில் இணைப்பை ஏற்படுத்தி மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் இந்த இணைப்பில், இணைந்து வருகின்றனர்.

குறிப்பு :

இந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைய அரசியல்வாதிகளுக்கு, பிரிவினைவாதிகளுக்கு அனுமதியில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கபட்டுள்ளது.