50% பணியாளர்களுடன் ஐ.டி நிறுவனங்கள் செயல்பட அனுமதி..! நிம்மதி பெருமூச்சு விடும் ஊழியர்கள்..! 

இன்றுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மத்திய அரசு பல்வேறு முக்கிய  அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன் படி ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது . 

அதன்படி,

சென்னையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க சென்னை மாநகராட்சி மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே மக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து தாமும் பாதிக்காமல் மற்றவர்களும் தம்மால் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது அவரவர் கடமை 

ஏப்.20ம் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே வேலை இழந்தோம் என வாடி வந்தவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விஷயமாக இது அமைந்துள்ளது. மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் ஏப்.20ம் தேதி முதல் இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது 

சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்றி செயல்பட தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதை அடுத்து கட்டுமானப்பணிகள் நடைபெறவும் அரசு அனுமதி கொடுத்து உள்ளது. அதே போன்று ஏப்ரல்.20ம் தேதிக்கு பிறகு எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்து உள்ளது. 

ஏப்ரல் 20 முதல் 100 நாள் வேலைதிட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து உள்ளது. அதே போன்று வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் ஏப்.20ம் தேதிக்கு பிறகு தொடங்க மத்திய அரசு அனுமதி கொடுத்து உள்ளது. 

பள்ளிகள் / கல்லூரிகள் 

ஏப்ரல் 20 முதல் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மே 3வரை பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படாது என்பது என்றும் மக்கள் ஒன்று கூடும் இடங்கள் மூடப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

ஐடி நிறுவனம் 

ஐடி நிறுவனத்தை பொறுத்தவரை 50% பணியாளர்களுடன் ஐ.டி நிறுவனங்கள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பணியாளர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் வேண்டும்.30-40% பயணிகளுடன் அந்த வாகனங்கள் இயங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.