உலகின் முன்னனி டெலிகாம் நெட்வொர்க் என்ற பெருமையை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ உருவாக காரணமாக இருந்த அந்த முக்கிய நபர் யார் தெரியுமா ..?

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தானாம் ...

சமீபத்தில் நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில் 'டிரைவர்ஸ் ஆஃப் சேஞ்ச்' எனும் விருதை பெற்ற முகேஷ் அம்பானி ஜியோ உருவாக முதல் காரணியாக இருந்தது இஷா தான் என தெரிவித்திருக்கிறார்.

'அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இஷா 2011-ம் ஆண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார்.கல்வி சார்ந்த பணிகளின் இடையே, அவர் வீட்டின் இன்டர்நெட் வேகம் படு மோசமாக உள்ளது என நொந்து கொண்டார், என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

மேலும்,அப்போது இந்தியாவில் அனைவராலும் டேட்டா வசதியை பெற  முடியாத சூழல் நிலவி வந்தது...காரணம் அதிக விலை என்பதே..

அப்போது தான் தோன்றியது இதற்கெல்லாம் மாற்றாக ஜியோ கொண்டுவர முடியும் என்று....இதன் விளைவாக தான் 2016-இல் துவங்கப்பட்ட ஜியோ சேவை இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இன்று  திகழ்கிறது...

எல்லையற்ற வாய்ஸ் கால்ஸ்,ப்ரீ டேட்டா என அனைத்தும் இலவசமாக வழங்கிய ஜியோவிற்கு என்றும் மக்கள் மத்தியில்வரவேற்பு அதிகமாக  உள்ளது

1966-ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை வெறும் ரூ.1000 முதலீட்டில் துவங்கி இன்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 5000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய குழுமமாக மாறி உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில்,இண்டர்நெட் மற்றும் டி.டி.ஹெச்.சேவைகளை விரைவில் வழங்கலாம் என்றும் அதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன