பெருத்த  எதிர்பார்ப்புகிடையில்,  நேற்று  மத்திய  அரசு  பட்ஜெட் தாக்கல்  செய்தது .பல துறைகளுக்கு  நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.  மேலும்,  வருமான வரியில்  சலுகை வழங்கியும் , அதே சமயத்தில்,  அதிக  வருமானம்  ஈட்டுவோருக்கு ,  வரி  சற்று  உயர்த்தியும்   அறிக்கை   வெளியிட்டுள்ளது. அதன்படி,  இந்த  வரி சலுகையால்,  யாரெல்லாம்  பயன்பெறுகிறார்கள்  என்பதை  பார்க்கலாம்.

குறைவான  சம்பளம்  வாங்குபவர்கள் :

குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு லாபம் ஏற்படும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2.5 முதல் 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு,  ஏற்கனவே  வருமான வரி 10% சதவீதமாக  இருந்தது.  தற்போது  5  சதவீதமாக  குறைக்கப்பட்டுள்ளதால், 5 லட்சம்  வரை   ஆண்டு  வருமானம்  இருபவர்களுக்கு, பிரச்சனை  இல்லை.

5 லட்சத்திற்கு மேல் :

5 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் நபர்கள் - ஆண்டுதோறும் வருமான வரியில் 12,500 ரூபாய் லாபம்  பெற  முடியும்  என்பது  குறிப்பிடத்தக்கது.

5௦ லட்சம் முதல் 1 கோடி  வரை :
வருடத்திற்கு 50 லட்சம் முதல் 1 கோடி வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு  - 10%  கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால்  கூடுதல் வரி  கட்ட  வேண்டும்  என்பது   குறிப்பிடத்தக்கது.


1 கோடிக்கு  மேல் :
இதேபோன்று, 1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 15% கூடுதல்  வரி  நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக  வருமானம்  ஈட்டுபவர்கள் அதிக  வரி செலுத்த  வேண்டிய நிலை  உருவாகி உள்ளது  என்பது  குறிபிடத்தக்கது.