இரிடியம் பற்றி ஆசை வார்த்தை கூறி,நல்ல வியாபாரம் செய்யலாம் என யாராவது  உங்களிடம் சொன்னால்,போலீசில் தாரளமாக புகார் அளிக்கலாம்.

தற்போது தமிழகத்தில் தலை தூக்கி நிற்கும் ஒரு விஷயம் என்னவென்றால்,வீட்டில் இரிடியம் வைத்தால் செல்வம் பெருகும்,அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கலாம் என கூறி கலர் கலரா  கதை விட்டு,ஒன்றும் அறியாதவர்களை குறி வைத்து ஏமாற்றும் கும்பல் அதிகரித்து உள்ளது...

அவர்கள் இப்படி தான் பேசுவார்கள்...

தொழில் விருத்திக்காக இன்னாருக்கு இரிடியம் இந்த தொகைக்கு கொடுத்துள்ளேன்.  இப்ப அவர்  ஜகஜோதியாக உள்ளார்..நிறைய பணம் வந்து சேருது..செல்வம் நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது என ரீல் விடுவார்கள்...

இதை நம்பி பல நபர்கள் லட்ச கணக்கில் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்

இது தொடர்பாக சமீபத்தில் பல நபர்களை கைது செய்தனர்.

இரிடியம் எதற்கு தேவப்படுகிறது?

விண்வெளி  ஆராய்ச்சியில்  ஈடுபட்டுள்ள விண்வெளிவீரர்களுக்கு தான்  இந்த இரிடியம் தேவை படுமாம்.

உலகிலேயே மிக குறைந்த அளவில் கிடைக்ககூடியது தான் இரிடியம்.இதனால் ஆன்மீக ரீதியாக இரிடியத்தை ஒப்பிட்டு,லட்ச கணக்கில் பணத்தை கறந்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த விழிப்புணர்வு மக்களிடேயே ஏற்படுத்த போலீசார் தொடர்ந்து   அறிவுறுத்தி வருகின்றனர்.