உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் இந்தியாவில் 50 சதவீதம் வரை விற்பனை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் தயாரிப்பான ஐ-பேட்டை வெளியிட்ட 2001ம் ஆண்டு முதல் இன்று வரை சந்திக்காத வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.


கடந்த 2015 ம் ஆண்டு இறுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த வருமானம் சுமார் 234 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது இந்த ஆண்டு 216 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. தவிர, கடந்த 2015 ம் ஆண்டு செப்டம்பர் மாத முடிவில் மட்டும் 48 மில்லியன் ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவும் இந்த ஆண்டு 45.5 மில்லியன் போன்களாக குறைந்துள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு சர்வதேச சந்தையில் போட்டியாளர்களின் நெருக்கடியே காரணம் என கருதப்படுகிறது.

ஆனால், ஆப்பிள் நிறுவனம் சீனா சந்தையைத் தொடர்ந்து இந்திய சந்தையை குறிவைக்கிறது. தவிர, கடந்த ஆண்டைவிட இந்தியாவில் ஐ-போனின் விற்பனை சுமார் 50 சதவீதம் உயர்துள்ளதாக அந்நிறுவனம் தொிவித்துள்ளது. தவிர, தற்போது இந்தியாவின் சுமார் 18,000 நகரங்கள் மற்றும் 2,00,000 கிராமங்களில் 4-ஜீ சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், வரும் காலங்களில் ஐ-போனின் விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தொிவித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை என ஆப்பிள் நிறுவனம் உறுதிபடத் தொிவித்துள்ளது.