கடல் ஊசி மீன் பற்றி சுவாரஸ்யமான தகவல் இதோ..!!
கடலில் வாழும் மீன் வகைகளில் ஒன்றான ஊசி மீன் பற்றி இங்கு பார்க்கலாம்.

அசைவம் என்றாலே நம் அனைவரும் முதலில் நினைவுக்கு வருவது சிக்கன், மட்டன் தான். அதுபோல் மீன் அசைவத்தில் தான் வரும். மீனை விரும்பாதோர் எவருமில்லை. இதில் பல வகைகள் உள்ளதால்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மீன்களை விரும்பி சாப்பிடுகின்றனர். என்னதான் மீன்களில் பல வகைகள் இருந்தாலும் அதனை பற்றிய முழு தகவலையும் நாம் அறிந்திருக்க மாட்டோம். அந்த வகையில் இங்கு நாம் மீன் வகைகளில் ஒன்றான கடல் ஊசி மீன் பற்றிய தகவலை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். வாங்க தெரிஞ்சுக்கலாம்.
கடல் ஊசி மீன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:
இது ஒரு வகையான கடல் மீன் ஆகும். கடல் ஊசி மீன்கள் பெலோனிடே என்ற குடும்பத்தை சேர்ந்த மீன் ஆகும். இந்த ஊசி இனத்தில் உள்ள பெரிய ஊசி மீன்களானது மற்ற சிறிய ஊசி மீன்களுக்கு உணவளிக்கிறது.
இந்த ஊசி மீன்கள் 3 செ.மீ முதல் 95 செ.மீ வரை நீளமாகவும் வளரும் தன்மையைக் கொண்டது. மேலும் இதன் பற்கள் மிகவும் கூர்மையாகக் காணப்படும். இந்த கடல் ஊசி மீன்கள் கடலின் மேற்பரப்பிற்கு வருவதை விட அதிகமான ஆழத்தில் செல்வதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மீனவர்கள் கடலில் ஊசி மீன்களை பிடிக்க முயலாது. ஏனெனில் அதற்கு கூர்மையான பற்கள் உண்டு. இந்த பற்களானது சுறாக்களை விட உடலில் அதிகப்படியான காயங்களை ஏற்படுத்தும். ஊசி மீன்களுக்கு நீளமான டாம்ஸ் மீன்கள் என்று ஒரு பெயர் உண்டு. மேலும் கடல் ஊசி மீன்களுக்கு வயிறு கிடையாது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் மூடப்பட இருக்கும் சினோக்கோ மீன்பிடித் துறைமுகம்! இடம்மாறும் மீன் வியாபாரிகள்!
இதில் 60-ற்கும் மேற்பட்ட மீன்கள் இனம் உள்ளது. அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு தான் காணப்படுகிறது. ஊசி மீன்கள் தண்ணீரிலேயே பறக்கும் மற்றும் குதிக்கும் தன்மையைக் கொண்டது. இந்த ஊசி மீனை நாம் உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.