கடனுக்கான  வட்டி விகிதம் 0.9  சதவீதம்  குறைப்பு : எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு....!!!

ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை  குறைத்து  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி , கடனுக்கான  வட்டி விகிதத்தை 0.9 சதவீதம்  குறைத்தது  எஸ்பிஐ வங்கி

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என  பிரதமர்  மோடி  அறிவித்ததை தொடர்ந்து, பலரும் தங்கள் கைவசம்  வைத்திருந்த, கருப்பு பணத்தை  வங்கியில்   டெபாசிட்  செய்துள்ளனர்.

தொடர்ந்து  பலரும்  பல  கோடி ரூபாய் அளவில்,   வங்கியில்  டெபாசிட்  செய்துள்ளதால்,  கடனுக்கான   வட்டி விகிதம் குறையும் என   எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டு  உரை  நிகழ்த்திய  பிரதமர்  மோடி அவர்கள் , வீட்டு கடனுக்கான  வட்டி குறையும் என  தெரிவித்து  இருந்தார்.

இதனை   தொடர்ந்து தற்போது எஸ்பிஐ வங்கி , வட்டி  விகிதத்தை  வெகுவாக  குறைத்துள்ளது.  அதன்படி, வட்டி விகிதத்தை 0.9 சதவீதம்  குறைத்துள்ளது.   

அதன்படி ,

பெண்களுக்குக்கான   வீட்டு கடன்களுக்கு  8.20  சதவீதமாக  இருக்கும். ( 75  லட்சம் வரை ) .இதே போன்று யூனியன்  வங்கி  மற்றும் ஐடிபிஐ வங்கியும் , கடனுக்கான  வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு , மத்திய  ரிசர்வ் வங்கி  வரவேற்பு தெரிவித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.