மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மக்கள்  நலன் கருதி, பல முக்கிய  திட்டங்களை செயல்படுத்தினார்.

பல திட்டங்கள் நடைமுறை படுத்தினாலும்,அனைவராலும் ஏற்றுக்கொள்ளபட்டு  பாராட்டு பெற்ற ஒரு  திட்டம் என்றால்,அது அம்மா உணவு திட்டம்....

 ஒரு அம்மா எப்படி,தன் குழந்தைகளுக்கு பசிக்கும் போதெல்லாம் சிரமம் இல்லாமல்  வயிறார உண்ண உணவளிப்பாளோ...அதே போன்று,பசியால் வாடும் மக்கள் உணவில்லாமல் தவிக்க கூடாது என்பதாலும்,பெரிய  பெரிய ஓட்டல்களில் சென்று ,  அதிக விலை கொடுத்து உண்ண இயலாத பாமர மக்களும் பயன் பெரும் வகையில்.. பசிக்கும் போது,உணவை உண்ண அம்மா உணவு திட்டம் முதலிடம் தான்...

இதில் என்ன ஒரு பெருமை என்றால்,மிக குறைந்த விலையில்,தரமான உணவை  உண்ண முடியும் என்பது தான்.....

பலரும் அரசு சார்ந்த திட்டம் என்பதால்,அங்கு போய் சாப்பிட ஒரு சிலர் சங்கடம் படுவதும் உண்டு......

ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காய், அம்மா உணவகத்தில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன்,மதிய உணவை அம்மா உணவகத்தில் உட்கொண்டார்.