Asianet News TamilAsianet News Tamil

ஈஷா யோக மையத்தில் 100 கும் மேற்பட்ட அதிகாரிகள்..! "இன்னர் எஞ்சினியரிங் லீடர்ஷிப்” 5 நாட்கள் பயிற்சி..!

இந்தியாவின் 19 மாநிலங்களிலிருந்து செயலாளர்கள், முதல் நலை செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் நிலை அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்றார்கள். பங்கேற்பாளர்களில் பலர்,  இந்த 5-நாள் பயிற்சி அனுபவம் ”அபரிமிதமானது” என்று கூறியதோடு, ஈஷா தன்னார்வலர்களின் ”இணையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை” பாராட்டினர்.

inner engineering leadership programme in isha foundation
Author
Chennai, First Published Feb 3, 2020, 12:41 PM IST

ஈஷா யோக மையத்தில் 100 கும்  மேற்பட்ட அதிகாரிகள்..! "இன்னர் எஞ்சினியரிங் லீடர்ஷிப்” 5 நாட்கள் பயிற்சி..! 

ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற இன்னர் எஞ்சினியர் லீடர்ஷிப் வகுப்பில் 100-க்கும் மேற்பட்ட மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

1 பிப்ரவரி 2020, கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற இன்னர் எஞ்சினியரிங் லீடர்ஷிப் வகுப்பில், 84 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட, 100-க்கும் மேற்பட்ட மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். தங்கியிருந்து பயிலும் இந்த 5 நாள் வகுப்பு, 2020 ஜனவரி 27 முதல் ஜனவரி 31 வரை நடைபெற்றது. இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அதில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, இந்திய மற்றும் சர்வதேச பயிற்சி மையங்களால் நடத்தப்படும் பல பயிற்சிகளை வழங்குகிறது. ஈஷாவின் இன்னர் எஞ்சினியரிங் லீடர்ஷிப் பயிற்சி அவற்றில் ஒன்று.

inner engineering leadership programme in isha foundation

5 நாட்கள் இன்னர் எஞ்சினியரிங் பயிற்சியில் உள்ளடங்குவன, உப-யோகா, ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கான தீட்சை, மற்றும் தலைமை பண்புக்கான பயிற்சி ஒரு மனிதனின் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் ஆக்கத்திறன், தலைப்பண்புக்கான பயிற்சி என்பது. தொடர்பாடல் திறன் மற்றும் முடிவெடுக்கும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதான ஒருவரின் வாழ்வில் சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவின் 19 மாநிலங்களிலிருந்து செயலாளர்கள், முதல் நலை செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் நிலை அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்றார்கள். பங்கேற்பாளர்களில் பலர்,  இந்த 5-நாள் பயிற்சி அனுபவம் ”அபரிமிதமானது” என்று கூறியதோடு, ஈஷா தன்னார்வலர்களின் ”இணையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை” பாராட்டினர்.

இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈஷாவால் நடத்தப்பட்டு வரும் DoPT நிகழ்ச்சிகளில் 6வது ஆகும். ”இன்னர் எஞ்சினியரிங் லீடர்ஷிப்” என்னும் இந்தப் பயிற்சி, தங்கள் முடிவுகளின் மூலம் பலரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, பல துறைகளில் தலைமைப் பொறுப்பில் உள்ள முக்கிய நபர்களுக்காக சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். 
இன்னர் எஞ்சினியரிங் 

inner engineering leadership programme in isha foundation

இன்னர் எஞ்சினியரிங், பண்டைய யோக அறிவியலில் இருந்து உருவான ஒரு தொழில்நுட்பம் ஆகும். ஒருவரின் உள்முக நல்வாழ்வினை கட்டமைப்பதற்கான கருவிகளை இது வழங்குகிறது. வாழ்வின் அனைத்து பரிமாணங்களுக்குமான உள்முக அடித்தளத்தையும் பார்வையையும் ஏற்படுத்தவும், பரபரப்பான வாழ்க்கை முறையின் சவால்களுக்கும் அமைதி மற்றும் நல்வாழ்விற்கான உள்முகத் தேடலுக்கும் இடையே தேவையான சமநிலையை அடையவும் இது உதவுகிறது. ஒருவரின் உள்ளுணர்தலை ஆழப்படுத்தி அவர் வாழக்கையை பார்க்கும் பார்வை மற்றும் உலகில் அவருடைய ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையான முறையிலேயே ஒரு பரிமாண மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஈஷா பவுண்டேஷன் 

ஈஷா பவுண்டேஷன், சத்குருவால் நிறுவப்பட்ட, தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படுகிற, லாப நோக்கற்ற, சர்வதேச, மனித ஆற்றலை வளர்க்கிற ஒரு மனித சேவை அமைப்பாகும். ஈஷா பவுண்டேஷன், 90 லட்சத்திற்கும் மேலான தன்னார்வத் தொண்டர்களால், உலகெங்கிலும் உள்ள 300 மையங்களில் இருந்து இயக்கப்படுகிறது, இந்த அமைப்பின் தலைமையகம், தென்னிந்தியாவின் வெள்ளயங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோக மையம் மற்றும் அமெரிக்காவின் நடு டென்னெஸ்ஸில் உள்ள ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயின்ஸஸ் ஆகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios