இந்தோனேஷியாவில் 62 பேருடன் மாயமான பயணிகள் விமானம், நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் உடைந்த பாகங்கள், கருப்பு பெட்டி ஜாவா கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் 62 பேருடன் மாயமான பயணிகள் விமானம், நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் உடைந்த பாகங்கள், கருப்பு பெட்டி ஜாவா கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த, 'ஸ்ரீவிஜயா ஏர்' என்ற விமான நிறுவனம், உள்நாடு மற்றும் சர்வதேச சேவைகள் வழங்கி வருகிறது. இந்த விமான நிறுவனத்துக்கு சொந்தமான, 'போயிங் 737' விமானம், ஜகார்த்தாவில் இருந்து, நாட்டின் மேற்கு காலிமாண்டன் மாகாணத்தில் உள்ள போன்டியானக்குக்கு, நேற்று முன்தினம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட, 44 நிமிடங்களில், அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானத்தில், 56 பயணியர் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் இருந்தனர். திடீரென மாயமான விமானத்தை தேடும் பணியில், மீட்புப் பணிகள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இந்தோனேஷியாவின் வடக்கே உள்ள ஆயிரம் தீவுகள் பகுதியில், கடலில் சில உலோகப் பொருட்கள் இருப்பதாக, மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு தேடுதல் பணி நடந்தது. அதில், ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்களும், மனித உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது உறுதியானது.
இந்த சூழலில் காணாமல் போன விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பதை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விமானம் விபத்திற்குள்ளான இடமும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ர்ந்து, விமானிகளின் உரையாடலை சேமித்து வைக்கும் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதில், விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கைகளில், ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த விமானத்தில் 46 பெரியவர்கள், 7 குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் பயணித்தனர். இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 11, 2021, 10:11 AM IST