கால் இழந்த தங்க மங்கையை பாராட்ட மறந்தவர்களுக்கு தலை குனிவு..! பி.வி சிந்து மட்டும் தான் தங்கமா..? 

உலகத்தில் எத்தனையோ பேர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வந்தாலும் ஒருசிலரின் சாதனைகள் மட்டுமே அனைவராலும் அறிய முடிகிறது. அதற்கு காரணம் பலபல...

அந்தவகையில் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சாதனை பெண்மணியின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாமே...

சமீபத்தில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் முதன்முதலாக தங்கம் வென்ற பிவி சிந்துவின் சாதனையை இந்தியாவே தூக்கிவைத்துக் கொண்டாடியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே... ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட மானஸி ஜோஷி தங்கம் வென்றது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

மும்பையில் பிறந்து வளர்ந்த ஜோசி ஒரு மென்பொறியாளர். எப்போதும் ஒரு கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதை விரும்பாத இவர் சிறுவயது முதலே அதிக ஆர்வம் கொண்டு விளையாடி வந்த பேட்மிட்டனில் அவ்வப்போது ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். பின்னர் பேட்மிட்டன் போட்டி எங்கு நடந்தாலும் வெற்றி பெறுவார். அந்த ஆர்வம் நாளுக்கு நாள் அவருக்கு அதிகமாகவே கொஞ்சம்கொஞ்சமாக வேலையிலிருந்து விடுபட்டு பேட்மிட்டன் தான் வேலை என முழுவீச்சாக இறங்குகிறார்

நல்ல எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையோடு சென்ற ஜோஷிக்கு காத்திருந்தது ஓர் அதிர்ச்சி. கடந்த 2011ஆம் ஆண்டு விபத்தில் சிக்கிக்கொண்ட மானசிக்கு இடது கால் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் தன்னால் ஓட முடியாது என புரிந்து கொண்ட மானசி நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. எட்டு வயதாக இருக்கும்போது பேட்மிண்டனில் அதிக ஆர்வம் கொண்ட மானசியால் எப்படியும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளார்.

அவ்வாறு முயற்சிக்கும்போது 2014 ஆம் ஆண்டு நடந்த பாரா ஏசியன் விளையாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தவறவிட்டார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே 2015ஆம் ஆண்டு நடந்த போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான பேரா பேட்மிட்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் மானசி.

விபத்தில் காலை இழந்த மானசி  ஒவ்வொரு நாளும் பேட்மிட்டன் விளையாடுவதில் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார் . இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பிவி சிந்து பயிற்சிபெற்ற பயிற்சியாளர் கோபிசந்த்- விடம் தான் மானசியும் 
பயிற்சி பெற்று தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இருந்தபோதிலும் மானசியின் தங்கத்தை கொண்டாடாத இந்தியர்கள் பிவி சிந்துவின் தங்கத்தை மட்டுமே கொண்டாடி விட்டனர் என்பதுதான் உண்மை..! இருந்தாலும் பிரபல பாலிவுட் நடிகையான டாப்ஸி மானசியின் வெற்றியை கொண்டாட மறந்து விட்டோமே என பதிவிட்டு இதுகுறித்த செய்தியை சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டதன் விளைவாகத்தான் மற்ற செய்திகள் மூலமாக மானசியின் திறமை மற்றும் அவர் பெற்ற வெற்றி மக்களுக்கு மெல்ல மெல்ல தெரிய வருகிறது.

இருந்தாலும் பிவி சிந்து பிவி சிந்து வா ? மானசியா என்றால் சிந்துவை தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் மானசி பெற்றதும் தங்கமே... சிந்து பெற்றதும் தங்கமே... இந்த இரண்டு தங்கங்களும் இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்தது உலக அளவில் பெருமை என்பதை உலக நாடுகளே ஏற்றுக்கொண்டாலும் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இந்தியர்கள் வேறுபட்டு விட்டார்களோ என்ற எண்ணம் மானசி பற்றி புதியதாக படிக்கும் நபர்களுக்கும் தோன்றும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.. அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்...!