அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 6 இடத்தை தட்டி சென்ற "சென்னை"..! அதிலும் முதல் இடம் எது தெரியுமா..?

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், ஜோத்பூர் ரயில் நிலையம் இரண்டாவது இடத்தையும், துர்காபுரா மூன்றாவது இடத்தையும் பின்னர் ஜம்முதாவி, காந்திநகர், விஜயவாடா உதய்ப்பூர் நகரம், ஹரித்வார் ரயில் நிலையங்கள் இடம்பிடித்துள்ளன.

indian railway released the list of unclean railway station and chennai alone got 6 places in unclean railway station list

அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 6 இடத்தை தட்டி சென்ற "சென்னை"..! என்னத்த சொல்ல..!  அதிலும் முதல் இடம் எது தெரியுமா..? 

இந்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த சுத்தமான ரயில் நிலையங்கள் மற்றும் மிகவும் அசுத்தமாக உள்ள ரயில் நிலையங்கள் பட்டியலை லிஸ்ட் போட்டு வெளியிடப்பட்டு உள்ளது. 

நாடு முழுக்க 720 ரயில் நிலையங்களை தூய்மை இந்தியா திட்டம் படி ஆராய்ந்து, அதிலிருந்து முதல் 10 இடங்களை பிடித்த சுத்தமான ரயில் நிலையங்கள் மற்றும் முதல் 10 இடங்களை பிடித்த அசுத்தமான ரயில் நிலையங்கள் எவை எவை ? என பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், ஜோத்பூர் ரயில் நிலையம் இரண்டாவது இடத்தையும், துர்காபுரா மூன்றாவது இடத்தையும் பின்னர் ஜம்முதாவி, காந்திநகர், விஜயவாடா உதய்ப்பூர் நகரம், ஹரித்வார் ரயில் நிலையங்கள் இடம்பிடித்துள்ளன.

indian railway released the list of unclean railway station and chennai alone got 6 places in unclean railway station list

இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த முதல் 10 இடங்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 7 ரயில் நிலையங்கள் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அசுத்தமான ரயில் நிலையங்கள்...! 

அதேபோன்று மிகவும் மோசமாக உள்ள ... அதாவது அசுத்தமாக உள்ள ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் ஆறு இடங்களை பிடித்துள்ளது தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

indian railway released the list of unclean railway station and chennai alone got 6 places in unclean railway station list

அதன்படி சென்னை பெருங்குளத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், கிண்டி ரயில் நிலையம் இரண்டாவது இடத்தையும், டெல்லி சடார் பஜார் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. நான்கு ஐந்து முறை வேளச்சேரி ரயில் நிலையம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம், சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையம் பிடித்துள்ளது. அதன்பின் கேரள மாநிலம் ஒட்டப்பாலம்  ரயில் நிலையமும் . அதனை தொடர்ந்து மீண்டும் தமிழகத்தின் பழவந்தாங்கல், பின்னர் பீகாரை சேர்ந்த அராரியா கோர்ட் ரயில் நிலையங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios