ஒப்புக்கொண்டது இந்தியா! அமெரிக்காவிற்கு மருந்து ஏற்றுமதி செய்ய தயார்!

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். நாளுக்கு  நாள் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம் நோய் தடுப்பு மருந்து தயாரிப்பிலும் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது உலக நாடுகள்.

இந்த ஒருநிலையில், கொரோனாவிற்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், மலேரியாவிற்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என அமெரிக்கா தெரிவித்து இருந்தது. 

இந்த ஒரு நிலையில், அமெரிகாவில் தொடர்ந்து அதிகரித்து கொரோனா பரவலை தடுக்க மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், இந்தியாவிடம் மருந்தை வழங்குமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால் இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதிக்கு மார்ச் 25 ஆம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு நிலையில் தடையை தளர்த்திக்கொண்டு, அமெரிக்காவிற்கு மருந்தை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது 

அண்டை நாடுகள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து அனுப்புகிறது இந்தியா. அந்த வகையில் தற்போது ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது 

இது குறித்து மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், 

கொரானோ அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறோம், பாராசிட்டமால்,ஹைட்ராக்ஸி குளாரோகுயின் மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.இந்த விவகாரத்தில் அரசியல் செய்யப்படுவதை இந்தியா விரும்பவில்லை என விளக்கம் கொடுத்து உள்ளது மத்திய அரசு.