Asianet News TamilAsianet News Tamil

இந்த ரகசியம் தெரிஞ்சிக்கிட்டா... "தாம்பத்யத்தில் நீங்கள் தான் கில்லி"..!

பொதுவாகவே ஒரு சில ஆண்கள் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி இல்லை என மருத்துவர்களை அணுகுவது, அதற்காக சில மருந்துகளை எடுத்துக்கொள்வதும் சாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது.

if you know these thing you will feel pleasure in life
Author
Chennai, First Published Dec 20, 2018, 6:19 PM IST

பொதுவாகவே ஒரு சில ஆண்கள் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி இல்லை என மருத்துவர்களை அணுகுவது, அதற்காக சில மருந்துகளை எடுத்துக்கொள்வதும் சாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதன் மூலம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சரியான கவனம் செலுத்துவதன் மூலம் இது போன்ற பிரச்சினைகளை மிக எளிதாக சமாளிக்க முடியும்.

சரி வாங்க .. விஷயத்துக்கு போகலாம் 

நம்முடைய உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டாலே தாம்பத்திய வாழ்க்கை மிக சிறப்பாக அமையும். அதில் குறிப்பாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது வியர்வை வரும் அளவிற்கு உடற்பயிற்சி செய்வதும், நீச்சல்  செய்வதும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இதயம் வலுப்பெறும் இதையும் வலுப்பெற்றால் சாதாரணமாகவே தாம்பத்ய வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருக்க செய்யும். காரணம் சீரான ரத்த ஓட்டமே..

if you know these thing you will feel pleasure in life

அடுத்ததாக ஒருசில பழங்களை எடுத்துக்கொள்ளலாம்

நாம் உட்கொள்ளும் உணவில், தினமும் வெங்காயம் பூண்டு சேர்த்துக்கொள்வது வழக்கம். வெங்காயம் மற்றும் பூண்டு இவை இரண்டையும் எடுத்துக் கொண்டால் ஒருவிதமான வாசம் இருக்கும். இந்த வாசம் ஒரு சிலருக்கு பிடிக்காது. இருந்தாலும் இரத்த ஓட்டத்திற்கு மிகவும் முக்கியமானது வெங்காயமும் பூண்டும்.

அடுத்ததாக, வாழைப்பழம், காரமான உணவு வகைகள் இவைகளை எடுத்துக் கொண்டாலும் இரத்த அழுத்தம் குறைந்து, உடல் சமநிலைக்கு கொண்டு வரப்படும். சீரான ரத்த ஓட்டம் ஏற்படும்போது சாதாரணமாகவே தாம்பத்தியத்தில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். Vitamin b1 அதிகமாக உள்ள உணவு வகைகள், முட்டை  எடுத்துக் கொண்டால் ரத்த சுழற்சி சீராக இருக்கும் தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும்.

if you know these thing you will feel pleasure in life

வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு அலுவலக பணியின் காரணமாக அதிக மன உளைச்சல், ரத்த அழுத்தம் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற சமயத்தில் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் தினமும் உடற்பயிற்சி செய்வது.. யோகா உள்ளிட்டவற்றை செய்து வந்தால் மனம் லேசாக இருக்கும். எப்போதும் புதுபுது சிந்தனையுடன் சிந்திக்க முடியும்... செயல்படுத்த முடியும் உடல் ஆரோக்கியத்தையும் பேண முடியும்.

அதிக மன அழுத்தம் இருக்கும் போது புகை பிடித்தல், ஆல்கஹால் எடுத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பழக்கத்திற்கு உள்ளானவர்கள் கண்டிப்பாக அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் பாதிக்கப்படுவார்கள். எனவே மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டு அடிக்கடி ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்

if you know these thing you will feel pleasure in life

தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருந்தாலே போதும் அதற்கு பதிலாக தினமும் உடற்பயிற்சி நல்ல ஆரோக்கியமான உணவு, சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொண்டாலே போதும் தாம்பத்ய வாழ்க்கையில் மிக சிறப்பாக விளங்க முடியும். காரணம் தாம்பத்ய வாழ்க்கைக்கு தேவையான மிக மிக முக்கியமான ஒரு விஷயம் உடல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டுமென்பதே. ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டுமென்றால் நல்ல பழக்க வழக்கம் நல்ல உணவு முறையும் இருக்க வேண்டும். இதனை மேற்கொள்ளும் யாரும் தாம்பத்திய பிரச்சினையை உணரமாட்டார்கள்

if you know these thing you will feel pleasure in life

தினமும் சிறிது நேரமாவது சன்லைட் நம் உடல் மீது படும்படி செய்ய வேண்டும். சூரிய வெளிச்சத்தில் நிற்கும்போது மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை தடுக்கும் இந்த மெலட்டோனின் ஹார்மோன் பொதுவாகவே நம்மை தூங்க வைக்க முயற்சி செய்யும். மெலட்டோனின் ஹார்மோன் சற்று தடுக்கும்போது அதிக தூக்கம் வருவதை நிறுத்தி மிகவும் ஆக்டிவாக நம் உடலை வைத்துக்கொள்ளும். மேலும் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட அதற்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும்.தாம்பத்யத்தில் அதிக நேரம் ஈடுபட வேண்டுமென ஆர்வம் உள்ள ஆண்கள் சுய இன்பம் மூலமாகவும் பயிற்சி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்யும் போது நாளடைவில் அது அவர்களுக்கு பழகி விடவே தன்னுடைய துணையுடன் அதிக நேரம் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியும். ஆனால் சுய இன்பம் காண்பதையும் அளவுக்கு அதிகமாக செய்தால் உடலளவில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios