நல்ல உறக்கம் யாருக்கு தான் பிடிக்காது....அதிலும் லேசான ஆடையை  அணிந்து  உறக்கம்  கொண்டால் அதில் வரும் சுகமே தனி தான் அல்லவா....

ஆனாலும் ஒரு சிலர் என்ன செயவார்ககுள் தெரியுமா எதை பற்றியும் கவலை படாமல், அலுவலகம்  முடிந்து வீட்டிற்கு சென்றதுமே,இரவு உணவை உண்டு உடனடியாக அப்படியே படுத்து தூங்குவார்கள்  அல்லவா...

அது முற்றிலும் தவறானது...ஆணாக இருந்தாலு சரி,பெண்ணாக இருந்தாலும் சரி .. இரவு தூங்கும் போது உள்ளடைகள் பயன்படுத்துவது பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக தான் உள்ளது....

 ஆண்களுக்கு

 காலை முதல் இரவு வரை அலுவலகப்பணிகள் இடையே, மிகவும் இறுக்கமான  உள்ளாடைகள்  அணிந்து இருப்பதால்,அதிகமான உஷ்ணம் அடையும்... அப்படி  உடல் சூடு அதிகரிக்கும் போது,ஆண் இனபெருக்க மண்டலம் தொடர்புடைய முக்கிய ஒன்றான டெஸ்ட்ரோஸ்டோன், விந்தணு  உற்பத்தியை  குறைத்து  விடுகிறது....இதனால் குழந்தை  உண்டாவதிலும் பிரச்சனை ஏற்படுகிறது.

மேலும், இவ்வாறு இல்லாமல், இரவு உறக்கத்தின் போது லேசான ஆடைகளை உடுத்தி, நல்ல காற்றோட்டமாக  இருந்தால் உடல் சூடு குறைந்து,விந்தணு உற்பத்தி அதிகரிக்கிறது என 500 ஆண்களை கொண்ட நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

பெண்களுக்கு

இதே போன்று பெண்களும் இரவில்,அதே உள்ளாடையை பயன்படுத்தும் போது, உடல் வெப்பம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், மிக எளிதில் நோய் தொற்றுதல், அரிப்பு உள்ளிட்ட பிரச்சனை ஏற்படும். எனவே,லேசான  ஆடையை பயன்படுத்தி ஆரோக்கியமான  வாழ்வை  வாழலாம்