உஷார் மக்களே..! பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் ..!

நீலகிரியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாடல்களுக்கு கூட தடை விதிக்கப்பட்டது. அதற்கு மாறாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்த மிகவும் எளிதாக தண்ணீர் ஏடிஎம் இயந்திரங்கள் ஆங்காங்கு வைக்கப்பட்டது. எப்போதெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ இந்த தண்ணீர் ஏடிஎம் இல் இருந்து ரூபாய் 5 செலுத்தி தண்ணீரைப் பிடித்துக் கொள்ளலாம். இந்தமுறை 24 மணி நேரமும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து... அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்ளாட்சி அமைப்பு சார்பாக ஓர் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பான்மசாலா, குட்கா, புகையிலை, வெற்றிலை பாக்கு, உள்ளிட்டவற்றை மென்று பொது இடங்களில் துப்பினால் ரூபாய் 1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த விஷயத்தில் கண்காணிப்பு பணியில் உள்ளாட்சி அமைப்பினர் முழுவதும் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் வெளிநாடுகளில் அபராதம் விதிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிற்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைவரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.