நம்மில் சில பேர் வாழ்வில் வெற்றி அடைந்தவர்களை பார்த்து, இவங்க மட்டும் எப்படி இப்படியெல்லாம் வாழ்கிறார்களே.. நாம் மட்டும் ஏன் இப்படி உள்ளோம் என  நினைத்து, தன்னை தானே பொய்யாக்கி கொள்ள செய்வார்கள்.

அதாவது வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான முயற்சியே எடுக்காமல் வாயிலேயே  வடை சுடுவது போல நினைத்து பார்ப்பார்களே தவிர.. அதற்கான முயற்சியை மேற்கொள்ள கூட  மாட்டாங்க... ஆனால் படு முயற்சி எடுத்து எப்படியாவது வாழ்க்கையில் ஜெயித்து காண்பிக்க வேண்டும் என நினைப்பவர்கர்களுக்கு அவர்கள் அடைய உள்ள வெற்றி வெகுதூரம் இல்லை என்பதை தெரிந்துக்கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ள இந்த  ஐந்து விஷயங்கள் இருந்தால் போதும் 

ஐந்து அறிகுறிகள்

இறந்தகால தோல்வி மற்றும் வெற்றிக்கு தடையாக இருக்கும் முட்டுக்கட்டை தவிர்த்து சிறந்த வேலையை செய்து வருவீர்கள்.
 
நீங்கள் விரும்பும் வாழ்க்கையை நோக்கி நகர்ந்துக்கொண்டே இருப்பீர்கள்
 
தனித்திறமையை பயன்படுத்துவீர்கள் .. 

தோற்றுவிட தயாராக இருப்பீர்கள்.. நாம் வெற்றி அடைய தோற்பதற்கும் தயாராக இருக்கும் மனநிலை கொண்டு இருப்பீர்கள்.
அதாவது, வந்தா வரட்டும் .. இல்லை என்றால் பார்த்துக் கொள்ளலாம் என எளிதாக எடுத்துக்கொள்வீர்கள்.

சிறு சிறு புதிய விஷயங்களையும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள்
 
இந்த ஐந்து விஷயங்கள் யார் ஒருவர் உணர்கின்றனரோ, அவர்கள் கட்டாயம் வாழ்வில் வெற்றி அடைவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது. வாழ்வில் நாம் மேற்கொள்ளும் முயற்சியை பயற்சியாய் எடுத்து அதனை தொடர்ச்சியாய் செய்து வரும் போது, கட்டாயம் வெற்றி   அடைந்து பணம் பேர் புகழ் வந்து சேரும்.