if we do yoga normal delivery will be happen said yoga star nanammala

யோகா செய்தால் "சுக பிரசவம்"..!வெற்றிக்கு வழிகாட்டியாக உள்ளது யோகா....

கோவையில் வசிக்கும் நானம்மாள் என்ற 96 வயது பாட்டியை தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்த அளவிற்கு யோகாவின் மூலம் உலகையே தன் பக்கம் ஈர்த்தவர்.சிரசாசனம், பத்மாசனம், சர்வாங்காசனம் என்று 50-க்கும் மேற்பட்ட ஆசனங்களைச் செய்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகிறார் இவர்.

குழந்தையாக இருந்தபோதே தன் தாத்தா, பாட்டி யோகா செய்வதைப் பார்த்து, யோகா செய்யத் தொடங்கிவிட்டார் நானம்மாள். தற்போது யோகா ஆசிரியரான இவர்,ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இன்றளவும்,தானாகவே அணைத்து வேலைகளையும் செய்து கொள்கிறார்.கண் பார்வை நன்றாக உள்ளது, நூலை ஊசியில் கோர்க்கும் அளவிற்கு அவருடைய கண் பார்வை உள்ளது...

கை வலி கால் வலி உள்ளிட்ட எந்த வழியும் இல்லாமல் ஆரோக்கியமாக வளர யோகா மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.

சுக பிரசவம்

யோகா செய்து வந்தால்,கண்டிப்பாக சுக பிரசவம் ஏற்படும் என கோவையில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசினார்

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் நடக்கிறது.சுக பிரசவம் என்பது கேள்வி குறியாகி உள்ளது .எனவே தினமும் யோகா செய்து பழகுங்கள், நான் தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து யோகா செய்வேன் என்று குறிப்பிட்டு உள்ளார் அதுமட்டுமில்லாமல், கம்பு வரகு, அரிசி, குதிரை வாலி உள்ளிட்ட சத்தான உணவை உட்கொண்டு வருவது நல்லது, நானும் அதனை தான் உண்டு வருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார் யோகா சூப்பர் ஸ்டார் நானம்மாள்.