என்னதான் சம்பாதித்தாலும் பணம் மட்டும் கையிலே தங்கவே மாட்டேங்கிறது என புலம்பும் நபர்களை  பார்த்து இருப்போம். அதற்கான பல காரணங்கள் அலசி ஆராய்ந்து பார்த்தாலும் கடைசியில் ஒன்றும் புரியாமல் கோவில் குளம் சென்று வழிபடும் நபர்களும் உண்டு...

காரணம் நமக்கு தெரிந்ததே.. நான் சந்தோஷமாக வாழும் போது கடவுளை வழிபட செல்வோமோ இல்லையோ.....எதாவது பிரச்சனை வந்தால் மட்டும் உடனே நம் மனதில் வந்து நிற்பது ஆண்டவா ஏன் எனக்கு இப்படி ஒரு சோதனை..? எப்போது தான் இந்த பிரச்சனை தீருமோ..? என்றெல்லாம் சொல்வது உண்டு...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, குறைவாக சம்பாதித்தாலும, வீடு முழுக்க சந்தோஷத்துடன் பண வரவோடு இருப்பதை தான் அனைவரும் விரும்புவர். 

பண தட்டுபாட்டை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். 

ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும், தட்சணா மூர்த்தியை வழிபடுவது ஆக சிறந்தது.
 
பணம் அதிகமாக கொடுக்கல் வாங்கல் இருக்கும் போது, உடுத்தி செல்ல வேண்டிய ஆடை நிறம்  சிவப்பு  அல்லது இளம் சாம்பல் நிறத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு அணிந்து சென்றால் போன காரியம் கை கூடும் என்பது ஐதீகம். 

கன்றுடன் கூடிய பசுவுக்கு தொடர்ந்து உணவளித்து வந்தால், செல்வம் பெருக்கெடுக்கும். 

ஜோடி கழுதை படம் அல்லது ஓடும் குதிரை படம் இது போன்ற படங்களை வீட்டில் வைத்து தினமும் பார்த்து வர வீட்டில் பண வரவு இருக்கும். 

ஆந்தையை வழிப்பட்டாலும் பண வரவு இருக்கும். அதே போன்று வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்து வந்தால் அமைதி  நிலவும். செல்வம் செழிக்கும். 

சில்லறை காசு வைக்கப்பட்ட பானை 

இன்றும் பானை பல இடங்களில் உள்ளது. இதில் உங்களுக்கு பிடித்த பானை ஒன்றை வாங்கி, கிழக்கு பக்கம் நோக்கி இருக்குமாறு வீட்டில் பானையை வைத்து, அதன் நிறைய காசு போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு வைக்கப்படும் இந்த பணியை வீட்டில் உள்ளவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

மேலும் பானையில் வாய் பகுதியை மூடி விட கூடாது...இது போன்ற சம்பிரதாயனகளை செய்து வந்தால் என்றுமே வீட்டில் பண பிரச்சனை வரவே வரத்து என்பது ஐதீகம்.