உங்களுக்கு பிடித்த நடிகையோட கட்டிப்பிடித்து டான்ஸ் ஆட ஆசையா..? 

டிக்டாக் செயலி மூலம் பல்வேறு விதமாக வீடியோ வெளியீட்டு அதன் மூலமாக பிரபலமடைந்து இன்று சினிமாவில் கூட கால்பதித்து விட்டனர் ஒரு சில அதிர்ஷ்ட வாசிகள்.

இதற்கு முன்னதாக சினிமா டயலாக், சினிமா பாடல்களுக்கு மட்டும் வாயை அசைத்து அதற்கேற்றவாறு நடனமாடி அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்த இந்த தருணத்தில் அதனுடைய அடுத்த லெவலாக ஒரு புதிய அப்டேட் இப்போது வந்துள்ளது.

அதாவது நமக்கு பிடித்த பாடலை நமக்கு பிடித்த  நடிகர் அல்லது நடிகையுடன் சேர்ந்து பாடுவது போலவும் ஆடுவது போலவும் வீடியோவை உருவாக்க முடியும் என்கிறது தற்போது சாமூகவலைத்தளத்தில் தென்படும் வீடியோக்கள் 

அதாவது ஒரு நடிகையுடன் தன்னை ஹீரோவாக பாவித்துக்கொள்ள வேண்டும் என்றால் அந்த ஹீரோவை நீக்கிவிட்டு நம்மை அங்கு பொருத்தலாம். அதேபோன்று ஒரு நடிகருடன் டூயட் பாட வேண்டும் என்றால் நடிகையை நீக்கிவிட்டு நம்மை அந்த இடத்தில் பொருத்தி கொள்ளலாம்.

இவ்வாறாக அடுத்த கட்ட வீடியோவிற்கு இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. ஏற்கனவே டிக்டாக் செயலி மூலம் இன்றைய இளைஞர்கள் அதிக நேரத்தை செலவிட்டு அதன்மூலம் தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்தது. 

இந்த நிலையில் இதுபோன்ற வீடியோக்கள் மூலம் வேறு என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்ற சிந்தனை மேலோங்கி உள்ளது.