பூச்சி கடித்து விட்டதா..? அவசரத்திற்கு இதை செய்யுங்கள்..! 

நம்மில் பல பேர், முதலுதவி பற்றி விழிப்புணர்வே இல்லாமல் இருப்பார்கள் அல்லவா..? ஒரு சின்ன பூச்சி கடித்தால் கூட அதனால் ஏற்படும் விஷத்தன்மையை உடனே குறைக்க, சில முக்கிய டிப்ஸ் கடைபிடிக்கலாம். இவை ஆபத்து காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மருத்துவரை நாட முடியாத இக்கட்டான சூழ்நிலையில், இதனை முயற்சிக்கலாம்.

கண்ணாடி விரியன்  பாம்பு கடித்தால், பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும். நல்ல பாம்பு கடித்தால், வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்ய வேண்டும்.

தேள்..!- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்த்தால் வலி  குறையும்.. வீக்கமும் குறையும். வண்டு..!  கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து சாரத்தை குடிக்க  வேண்டும். சிலந்தி கடித்தால், ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய் கடித்தால், மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி கடித்தால், வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது எனபது குறிப்பிடத்தக்கது. 

பூரான் கடித்தால், மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.