கடந்த 18 ஆண்டுகளில் இப்போதுதான் விடுமுறை எடுத்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். "மேன் வெர்சஸ் வைல்ட்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள "ஜிம் கார்பெட்"தேசிய பூங்காவில் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேர் கிரல்ஸ் மோடியிடம் பல்வேறுவிதமான கேள்விகளை எழுப்பினார்

அப்போது பேசிய மோடி,"என்னுடைய 18 ஆண்டுகால அரசு பணியில் இப்போதுதான் விடுமுறை எடுத்துள்ளேன். எனக்கு பயம் என்பது சற்றும் கிடையாது.. எந்த ஒரு விஷயத்தையும் சாதகமாகவே நடைபெறும் என எதிர்பார்த்து ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதால் அதில் வரும் சிறு சிறு சிக்கலையும் தூக்கி எறியும் நிலை எனக்கு உண்டு.

மக்கள் இயற்கை வளத்தை அழிக்காமல் எதிர்கால சந்ததியினருக்கு விட்டு செல்ல வேண்டும்.. 13 ஆண்டுகளாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து இருந்தேன்...பின்னர் பிரதமராக பொறுப்பேற்று ஐந்து ஆண்டு காலம் கடந்து விட்டது... இந்த 18 ஆண்டு கால அரசு பணியில் தற்போது தான் விடுப்பு எடுத்து உள்ளேன். மக்களுக்காக உழைப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.. இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறி வெற்றி பெற வேண்டும்" என தெரிவித்து உள்ளார்.