மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் ஒரே எண்ணில் 2 நபர்களுக்கு  வங்கி கணக்கு கொடுத்ததால் ஒரு வித்தியாசமான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு 24 ஆயிரம் கிளைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு தருணத்தில் மத்திய பிரதேசத்தின் பிண்ட் என்ற மாவட்டத்தில் உள்ள ஆலம்பூர் நகரில் இயங்கி வந்த ஸ்டேட் பாங்கில் ருராய் மற்றும் ரவுனி என்ற இருவேறு  பகுதியில் வசித்து வந்த ஹூகும் சிங் என்ற பெயர் கொண்ட இரண்டு நபர்களுக்கு ஒரே ஒரு வங்கி கணக்கை கொடுத்து உள்ளனர் வங்கி ஊழியர்கள் 

இதில் ஹூகும் சிங் கடந்த 2016 ஆம் ஆண்டு வங்கி கணக்கை திறந்து நிலம் வாங்குவதற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி வங்கி கணக்கை சரிபார்த்த போது கணக்கில் இருந்து 89 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி ஊழியரிடம் கேட்டுள்ளார்.

பின்னர் அதனை சரிபார்த்த போது ஒரே வங்கி கணக்கில் இருவரின் பெயர் உள்ளதாகவும், ஒருவர் பணத்தை போட போட மற்றொருவர் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துள்ளார். இதுகுறித்து அந்த நபரிடம் விசாரணை நடத்தி பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என வங்கியில் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, பணம் எடுத்தது உண்மை. ஆனால் மோடி தான் வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறார் என்ற நம்பிக்கையில் நான் பணத்தை எடுத்து வந்தேன் என தெரிவித்து உள்ளார்.

மேலும் இது முழுக்க முழுக்க வங்கியின் கவனக் குறைவே தவிர, என்னுடைய பிரச்சனை இல்லை என்று தெரிவித்து உள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர் இதுநாள்வரை நீதிகேட்டு இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவ்வப்போது வங்கியின் படி ஏறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.