பொதுவாகவே ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் தன் கணவர் தான்  அத்தனை ஜென்மத்திற்கும் கணவராக இருக்க வேண்டும் என பெண்கள்  விரதம் இருந்து பூஜை செய்வது வழக்கம்

இதைதான் இதுநாள் வரை கேள்வி பட்டிருப்போம்...ஆனால் தற்போது  மாறி வரும் காலத்திற்கு ஏற்ப, தொழிநுட்பம் வளர்கிறதோ இல்லையோ நம்முடைய கலாசாரத்தில் பல மாற்றங்கள் வந்துவிட்டதோ என்ற  சந்தேகம் கூட எழலாம்

மகாராஷ்டிர மாநிஙம் ஔரங்காபாத்தில் உள்ள வாலுஜ் என்ற இடத்தில் சில கணவன்மார்கள் கூடி அங்குள்ள மரத்திற்கு பூஜை செய்து வருகின்றனர்.

இந்த பூஜையின் முக்கிய வேண்டுதல் என்னவென்று தெரியுமா..? இனி  எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும், இப்போதுள்ள மனைவி தன் வாழ்கையில் மீண்டும் வந்துவிடக்கூடாது என்றும்,  மனைவியிடமிருந்து விடுதலை வேண்டும் என்றும் பிரார்த்தனை  நடத்தி உள்ள சம்பவம் அனைத்து மனைவிமார்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மற்ற ஆண்களும் என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை என மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருப்பது போல, சிரிக்கவும் செய்கிறார்கள்..சிந்திக்கவும் செய்கிறார்கள்....

வட் பூர்ணிமா :

வட் பூர்ணிமா என்ற பூஜை கணவனின் நன்மைக்காக   மனைவிமார்கள் செய்யும் பூஜை. இந்த பூஜையானது வட மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்தய பூஜையில் ஏழேழு ஜென்மத்திற்கும் தன் கணவரே வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என நினைத்து பூஜை செய்வார்கள்....

இந்த தருணத்தில் தான், ஆண்கள் ஒன்று கூடி இது போன்ற பூஜையில்  ஈடுபட்டு உள்ளனர்.