பாம்பு தோல் போன்று லெக்கின்ஸ் அணிந்திருந்த மனைவியின் காலை கணவரே அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த பெண் ஒருவர் தன்னுடைய கணவர் வீட்டிற்கு வரும்போது ஒரு சர்ப்ரைஸ் தரவேண்டும் என வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார்.

அப்போது ஷாப்பிங் சென்று இருந்த இந்த பெண், கடையில் இருந்த புதுவகையான லெக்கின்ஸ் உடை பார்த்துள்ளார், அந்த லெகின்ஸ் பார்க்கும்போது கருநாக பாம்பு போன்று மாடல் செய்யப்பட்டுள்ளது.

இதைப்பார்த்தவுடன் அதிர்ந்து போன இந்த பெண் ஒரு வித்தியாசமாக இருக்குமே என எண்ணி அதனை வாங்கி உள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்து அன்றைய இரவே அந்த லெக்கின்ஸ் அணிந்து தன் கணவருக்காக, படுக்கையறையில் காத்திருந்து உள்ளார்.

இந்த லெக்கின்ஸ் அணிந்து பாம்பு இருப்பதை போன்று பயமுறுத்த வேண்டும் என எண்ணி உள்ளார் மனைவி. அதற்கேற்றவாறு கொஞ்சம் நேரம் காத்திருந்த மனைவி, அவருக்கே தெரியாமல் சற்று கண்ணசைத்து நல்ல உறக்கம் கொண்டுள்ளார். சொல்லி வைத்த மாதிரி அன்றைய தினத்தில் சற்று தாமதமாக வந்த கணவன் தன் மனைவியை தேடி வீட்டிற்குள் நுழைய, அப்போது படுக்கையறையை பார்த்து அதிர்ந்து உள்ளார்.

மனைவி எங்கே சென்றார் என யோசிப்பதை விட அய்யய்யோ கட்டிலில் பாம்பு உள்ளதே... அதுவும் இரண்டு பாம்பு என எண்ணி வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மனைவியின் காலை சரமாரியாக அடித்துள்ளார்.

வலியில் துடித்துக் கதறிய மனைவி, ஐயோ இது பாம்பு இல்ல.. நான் தான்.. என்னுடைய கால் தான் என சப்தம் போடவே, உடனே சுதாரித்துக் கொண்ட கணவர் உருட்டுக்கட்டையை கீழே போட்டுவிட்டு, சாரி.. சாரி என கூறி மனைவியை அப்படியே தன்னுடைய இரு கரங்களால் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக சென்றுள்ளார்.

பின்னர்தான் நடந்தவை அனைத்தும் தெரியவந்துள்ளது. விளையாட்டு விபரீதம் ஆகும் என்று சொல்வார்களே... அதற்கு உதாரணமாக இந்த செயல் அமைந்துவிட்டதால் இதுகுறித்த செய்தி மற்றும் போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.
மனைவியோ தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் மருத்துவமனையில்...!