தாம்பத்ய உறவின் போது  இப்படி ஒரு  "பொய்"..!  ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல்...!  

தாம்பத்திய உறவின்போது திருப்தி அடையாமலேயே திருப்தி அடைந்து விட்டதாக பெண்கள் பொய் சொல்வதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அதாவது 64 சதவீத தம்பதியினர் அவர்களுடைய தாம்பத்ய உறவில் திருப்தியாக இருப்பதாக போலியாக வெளிப்படுத்துகின்றனர் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தான் அதிகம் இந்த விஷயத்தில் பொய் சொல்வதாகவும் அதே போன்று ஆண்களும் சில நேரங்களில் திருப்தி அடையாமலேயே போலியாக  நடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது

அதற்கு சில காரணங்களும் குறிப்பிடப்படுகின்றன மனைவி திருப்தி அடையவில்லை என்று கணவனிடம் சொன்னால்  ஒருவிதமான தாழ்வு மனப்பான்மைக்கு கணவர் தள்ளப்படுவார்  என்றும், இதனால் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதி  போலியாக நடிக்கின்றனர் என தெரிய வந்துள்ளது

அதேபோன்று ஆண்களும் சில சமயங்களில் திருப்தியடையாமல் போலியாக திருப்தி அடைந்து விட்டதாக தெரிவிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.