Asianet News TamilAsianet News Tamil

"அன்பாய் ஒரு அணைப்பு, ஆசையாய் ஒரு முத்தம்"..! தெரியுமா இந்த மந்திரம்...!

காலையில் தாமதமாக எழுந்தால் மன அழுத்தம் ஏற்படும்.  காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது போன்ற எளிய நடைமுறைகள், நாள் முழுவதும் ஏற்படும் பதற்றத்தை தடுக்கும். 

how we should run our life peacefully
Author
Chennai, First Published Feb 1, 2020, 5:07 PM IST

"அன்பாய் ஒரு அணைப்பு, ஆசையாய் ஒரு முத்தம்"..!  தெரியுமா இந்த மந்திரம்...! 

உங்களது காலை எப்படி விடிகிறதோ, அதே போல தான் அந்த நாள் முழுவதும் இருக்கும். உங்கள் காலை பொழுதை இனிமையாகவும், ஆரோக்கியமானதாகவும் தொடங்க கற்றுக் கொள்ளுங்கள்.

அற்புதமான நாள் தொடங்க :

காலையில் தாமதமாக எழுந்தால் மன அழுத்தம் ஏற்படும்.  காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது போன்ற எளிய நடைமுறைகள்,  நாள் முழுவதும் ஏற்படும் பதற்றத்தை தடுக்கும். இந்த நடைமுறை காலையை வழக்கமாக செயல்படுத்த உதவும். இது போன்ற எளிய நடைமுறையை பழக்கமாக்கி கொண்டால் , நாள் முழுவதும் அமைதியாகவும், அதிக வேலை செய்யும் உத்வேகத்தை கொடுக்கும். உங்கள் அலாரம் அடிக்கும் போதே, அணைத்து விட்டு படுக்கையை வி்ட்டு எழுந்து இன்றைய நாளை தொடங்குங்கள்.  

காலையில் மொபைல் போனை பார்க்காதீர்கள் :

காலை எழுந்த உடன்  மொபைலை தேடாதீர்கள். காலை அலாரம் அடிக்கும் போது, எழுந்து அடுத்த வேளையை பாருங்கள். மொபைல் போன் உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும். 

காலையில் தண்ணீர் குடிப்பது நல்லது :

காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும். முதல் வேளையாக தண்ணீர் குடிப்பதால், இரத்த வெள்ளையணுக்கள் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராடி, உடலை பாதுகாக்கும். தண்ணீர் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உடலின் எடை குறையும். 

க்ரீன் டீ

க்ரீன் டீ யில் இருக்கும் ஃப்ளேவினாய்ட், ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலிற்கு எதிர்ப்பு திறன் அதிகரிக்க்சச் செய்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது. குடல்களில் தங்கும் கழிவுகளை சுத்தமாக வெளியேற்றுகிறது. காலை நேரத்தை பசுமையான க்ரீன் டீ யுடன் தொடங்கலாம்.

how we should run our life peacefully

நாளிதழ் படிக்கும் பழக்கம் :

காலை வேளைகளில் புத்தகம் அல்லது நாளிதழ்களை படிப்பது நல்ல பழக்கமாகும்.  குறைந்தது 1 முதல் 3  பக்கங்களையாவது நாளிதழில் படியுங்கள்.  இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

how we should run our life peacefully

காட்சிப்படுத்தி பாருங்கள் :

கண்ணை மூடி சில நிமிடம் காட்சிப்படுத்தி பாருங்கள். இது நாள்முழுவதும் நம்பிக்கையுடனும், புது உத்வேகத்துடனும் செயல்பட உதவும். மற்றவர்களிடம் திறம்பட தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யவும் இது பெரிதும் உதவும். 

உடற்பயிற்சி : 

தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது உடலுக்கு நல்லது. மெதுவான முதுகு தசைப்பிடிப்புகளை  4 முதல் 5 சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை நீட்சி அடைய செய்யலாம். தினமும் காலை இப்படி செய்து வந்தால் உடலில் சீராக ரத்தம் பாய உதவும். காலையி ல் செய்யும் உடற்பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. உடற்பயிற்சி நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருத்திருகிறது. 

how we should run our life peacefully

உங்கள் நாளை அட்டவணைப்படுத்துங்கள் :

இன்று நாள் முழுவதும் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை 5 நிமிடம் செலவு செய்து முடிவு செய்யுங்கள். இது இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க உதவும். இது உங்கள் முக்கியமான பணிகளை உடனுக்குடன் முடிக்க உதவும். 

உற்சாகமாய் இருங்கள் :

மெல்லிய இசை யுடன் கூடிய நடனம் உங்கள் காலை பதற்றத்தை தடுக்கும். மெல்லிய இசை காலையில் செய்ய வேண்டிய வேலைகளை சீராய் செய்ய உதவும். 

சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் :

படுக்கை அறைகளை சுத்தப்படுத்த கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆர்வம் இல்லாமல் சுத்தப்படுத்தும் வேலையை செய்யும் போது நாள்முழுவதும் சோர்வான உணர்வு ஏற்படும். 

வாய் விட்டு சிரியுங்கள் :

வாய்விட்டு சிரிக்கும்போது, உடலிலுள்ள, முக்கியமாய் முகத்திலுள்ள நாடி நரம்புகள் அனைத்தும் உயிர் பெறுகின்றன. இதனால் ரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் பாய்கிறது. உடலில் ஏற்படும் சிறு சிறு பாதிப்பை தானே சீர் செய்கிறது.

how we should run our life peacefully

காலை நேர உணவு:

காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும். காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. 

8 மணி நேர தூக்கம் அவசியம் :

ஒருவருக்கு தினமும் எட்டுமணி நேர தூக்கம் அவசியம். இதனால் உடல் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு பெறுகிறது. தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருக்கும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு பாதிப்படைகிறது. இதனால் செக்ஸ் வாழ்க்கை தடைபடுகிறது.  தினந்தோறும் எட்டு மணி நேர தூக்கத்தை மேற்கொண்டு, மனைவியுடன் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள். 

15 நிமிடங்களுக்கு முன் அலாரம் வையுங்கள் :

காலை உங்கள் நேரத்தை திட்டமிட்டு, அதற்கேற்ப 15 நிமிடங்களுக்கு முன் அலாரம் வையுங்கள்.

how we should run our life peacefully

குழந்தைகளை நேரத்திற்கு பள்ளிக்கு தயார் செய்யுங்கள் :

குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்துவது தனிக்கலை. அவர்களது மதிய உணவு என்ன என்பதை முன்பே முடிவெடுங்கள். இதனால் காலை நேர பதற்றத்தை தவிர்க்கலாம்.

காலை நேர ரொமான்ஸ் :

உங்களின் தேவையை உங்கள் செயல்பாடுகளே உணர்த்துமே. காலை நேர ரொமான்ஸ் மனைவிக்கு மிகவும் பிடித்தமானது. அன்பாய் ஒரு அணைப்பு, ஆசையாய் ஒரு முத்தம் என தொடங்குங்கள். அன்று உங்கள் நாள் இனிமையாய் தொடங்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios