வீட்டிலேயே பட்டுப்புடவை இப்படி துவைங்க.. சாயம் போகாது; இனி டிரை கிளீன் வேண்டாம்..!!

பட்டுப்புடவையை சாயம் போகாமல் வீட்டிலேயே எளிய முறையில் எவ்வாறு துவைக்கலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

how to wash silk or pattu saree at home in tamil mks

தமிழ்நாட்டின்  பாரம்பரிய உடை சேலைதான். சேலையின் பெண்கள் அழகோ அழகோ அவ்வளவு அழகு. அதுவும் பட்டு சேலைக்கு மவுசு ரொம்பவே அதிகம் தான். அந்த வகையில், திருமணங்கள், விழாக்கள், விசேஷ நாட்களில் பெண்கள் இந்த பட்டு சேலையை அதிகம் விரும்பி கட்டி செல்வது உண்டு. அப்பேர்ப்பட்ட இந்த பட்டு சேலையானது மிகவும் மலிவான விலையில் இருந்து லட்சக்கணக்கில் வரை கிடைக்கிறது. ஒவ்வொரு பெண்களும் தங்களது வசதிக்கேற்ப இந்த புடவையை வாங்கிக் கொள்கிறார்கள். 

எவ்வளவு விலை கொடுத்து பெண்கள் இந்த பட்டு புடவை வாங்கினாலும் அதனை எவ்வாறு துவைக்க வேண்டும்  என்று பெரும்பாலான பெண்களுக்கு தெரிவதில்லை. இன்னும் சிலரோ அதனை பயன்படுத்திய உடனே அதனை ட்ரை கிளீனிற்கு கொடுத்து விடுகிறார்கள். இந்நிலையில் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே பட்டுப்புடவைகளை துவைக்க மற்றும் பாதுகாப்பது எவ்வாறு என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

குளிர்ந்த நீர்: நீங்கள் உங்கள் பட்டுப்புடவைகளை எப்போதுமே குளிர்ந்த நீரில் துவைப்பது நல்லது. துவைப்பதற்கு முன் சிறிது நேரம் குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும். அதுபோல் நீங்கள் சூடான தண்ணீரில் துணியை துவைத்தால் வெப்பத்தால் துணியில் நிறத்தை இழப்பீர்கள்.

வினிகர்: இப்போது ஒரு சுத்தமான வாழிய எடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி அளவு வெள்ளை வினிகரை சேர்க்கவும் பின்னர் அதில் ஊற வைத்த பட்டுப்புடவையை நனைத்து பத்து நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும். பின் நீங்கள் சுத்தமான தண்ணீரில் சேலையை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் சேலையில் படிந்திருக்கும் கறைகள் நீங்கும்.

இதையும் படிங்க:  ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கவேண்டிய 5 புடவைகள்..! முழு விபரம் இதோ..!!

நிழலில் காயப் போடவும்: நீங்கள் பட்டுப்புடவையை துவைத்த பின் அவற்றை ஒருபோதும் புள்ளியவே கூடாது தண்ணீர் வடியும் வரை அதனை அப்படியே விட்டு விடுங்கள். தண்ணீர் நன்கு வடிந்த பின் அதனை நிழலில் காய போட வேண்டும். சூரிய ஒளி ஒருபோதும் சேலையின் மேல் நபடக்கூடாது. ஏனெனில் சூரிய ஒளி பட்டால் சேலை நிறம் மங்கும்.

தனி இடத்தில் வைக்கவும்: பட்டுப்புடவையை ஒருபோதும் மற்ற துணிகளுடன் வைக்க வேண்டாம். அதற்கென தனியான ஒரு இடத்தில் வைத்து பருத்தி துணியால் மூடி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பட்டுப்புடவை பாதுகாப்பாக இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios